இதில் சீனாவை முந்துவது எளிதான காரியமில்லை.. இந்தியா என்ன செய்யும்..?

உலக முழுவதிலும் நாடுகள் மத்தியில் பகை வளர்ந்து வரும் நிலையில் தனது நாடுகளைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புகளைப் பலப்படும் நோக்கியில் ஒவ்வொரு நாடும் ஆண்டுதோறும் கப்பல் படை, விமானப் படை மற்றும் ராணுவத்திற்குத் தனிப்பட்ட நிதியை ஒதுக்கி வருகிறது.

இந்தத் தொகையைப் பார்த்தாலே ஒரு நாடு எவ்வளவு பகை வளர்த்துள்ளது என்பது மட்டும் அல்லாமல் இந்தப் பகையில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என்பதையும் உணர்த்துகிறது.

தென் கொரியா

தென் கொரியா

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகள் மத்தியில் இருக்கும் பிரச்சனையைச் சமாளிக்கவே அதிகளவிலான நிதியை தென்கொரியா ஒதுக்கி வருகிறது.

2017ஆம் ஆண்டில் தென் கொரியா சுமார் 35.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

ஜெர்மனி

ஜெர்மனி

ஐரோப்பாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும் ஜெர்மனி 2017ஆம் ஆண்டில் பாதுகாப்பு துறைக்காகச் சுமார் 41.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

தொழில்நுட்ப உலகில் முன்னோடியாக இருந்தாலும் அமெரிக்கா, வட கொரியா போன்ற நாடுகளை எதிர்கொள்ளவும் ஒவ்வொரு ஆண்டுப் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கப்பட்டும் வரும் நிதியை அதிகரித்து வருகிறது.

2017ஆம் ஆண்டில் மட்டும் ஜப்பான் சுமார் 46 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

பிரான்ஸ்

பிரான்ஸ்

பாதுகாப்பு துறைக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளின் டாப் 10 பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் 2017ஆம் ஆண்டில் 48.6 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

யுனைடெட் கிங்டம்

யுனைடெட் கிங்டம்

வல்லரசு நாடுகளில் ஒன்றான யுனைடெட் கிங்டம் நாடுக்குப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இத்தகைய நிலையில் 2017ஆம் ஆண்டில் மட்டும் யுனைடெட் கிங்டம் சுமார் 50.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்தியா

இந்தியா

உலகிலேயே அதிக நாடுகளுடன் நட்புறவை வைத்திருந்தாலும் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் சில பிரச்சனைகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இதனைச் சமாளிக்கப் பாதுகாப்புத் துறையைக் கண்டிப்பாக வலிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 52.5 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

 ரஷ்யா

ரஷ்யா

டாப் 3 வல்லரசு நாடுகளின் பட்டியலில் நுழையத் திட்டமிடும் ரஷ்யாவிற்குப் பாதுகாப்பை வலிமைப்படுத்துவது கட்டாயம்.

2017ஆம் ஆண்டில் ரஷ்யா 61.2 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

சமீபத்தில் அரபு நாடுகள் மத்தியில் பாதுகாப்புச் சார்ந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டுச் சவுதி தனது பாதுகாப்பு துறைக்குச் சுமார் 76.7 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

சீனா

சீனா

அமெரிக்காவிற்குச் சீனாவுடன் பிரச்சனை முற்றியுள்ள இன்றைய நிலையில் பாதுகாப்புக்காகத் தனது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 8.1 சதவீதம் வரையிலான நிதியைப் பாதுகாப்பு துறைக்காக மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யுள்ளது.

2017ஆம் ஆண்டில் 150.5 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ள சீனா 2018ஆம் ஆண்டில் 8.1 சதவீத ஜிடிபி அளவான 175 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

 

அமெரிக்கா

அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்காவிற்குப் பிரச்சனை இல்லாத நாடே இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா சுமார் 602.8 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இது உலகின் டாப் 15 நாடுகள் பாதுகாப்பு துறைக்குச் செலவிடும் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+