மகிழ்ச்சி.. இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள்கள் விலை ரூ.7.36 லட்சம் வரை குறைந்தது..!
மூன்று வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு 800சிசி-க்கும் அதிகமாக உள்ள இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதம் குறைத்து அறிவித்தது.
இதனால் இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் மீது இருந்த 75 சதவீத வரியானது 50 சதவீதமாகக் குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீது விதிக்கப்படும் வரி குறித்துத் தனது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தார்.
இந்தியர்கள்
இறக்குமதி வரியைக் குறைத்துள்ளதால் வெளிநாட்டு வாகனங்களை வாங்க வேண்டும் என்று இருந்த இந்தியர்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக டுக்காட்டி, ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்திய மோட்டார் சைக்கிள் அனைத்து நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலையினைக் குறைத்துள்ளன.
டுக்காட்டி நிறுவனம்
டுக்காட்டி நிறுவனம் குறைந்தபட்சம் 2.92 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 7.36 லட்சம் ரூபாய் வரை தங்களது மோட்டார் சைக்கிள் தயாரிப்புகள் மீதான விலையினைக் குறைத்துள்ளது. எனவே மாஸ்டர் 1200 பைக் மாடல் 2.92 லட்சம் ரூபாய் விலை குறைந்து 20.10 லட்சம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் பனிகல் ஆர் இறுதி பதிப்பு வாகனம் 7.36 லட்சம் ரூபாய் விலை குறைந்து 51.82 லட்சம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹார்லி டேவிட்சன்
ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் குறைந்தபட்சம் 2.62 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 3.73 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ்
இந்திய மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் தங்களது வாகனங்கள் மீது 3 லட்சம் ரூபாய் வரை விலை குறைப்பினை செய்துள்ளது.
| தயாரிப்புகள் | விலை (ரூ) |
|---|---|
| இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி | 10,99,500 |
| இந்தியன் ஸ்கவுட் | 12,69,500 |
| இந்தியன் ஸ்கவுட் பாபர் | 11,99,000 முதல் |
| இந்தியன் சீப் டார்க் ஹார்ஸ் | 18,81,000 |
| இந்தியன் சீப் கிளாசிக் | 21,29,500 |
| இந்தியன் சீப் விண்டேஜ் | 25,32,500 |
| இந்தியன் ஸ்ப்ரிங்-ஃபீல்டு | 33,50,000 முதல் |
| இந்தியன் சீப்டெயின் | 32,01,000 முதல் |
| இந்தியன் ரோட்மாஸ்டர் | 39,00,000 முதல் |
விலை உயர்த்தும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கஸ்
குறைந்த விலையில் சிபியூ வாகனங்களை விற்று வரும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்கஸ் இந்தியாவில் உதிரிப்பாகங்களாக இறக்குமதி செய்து பின்னர் அசம்பிள் செய்து வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. புதிய பட்ஜெட்டில் கலால் வரி போன்றவற்றை உயர்த்தியுள்ளதால் 40,000 ரூபாய் முதல் 62,000 ரூபாய் வரை இந்த நிறுவன வாகனங்களின் விலையை மார்ச் 19 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications