ரெய்டு அண்ட் டெய்லர் பிராண்ட் ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி ஆடம்பர ஆடை நிறுவனமாக மட்டும் அல்லாமல் பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன்-ஐ வைத்து இந்தியா முழுவதும் தனது ஆடை தயாரிப்புகளை விளம்பரம் செய்து வர்த்தகத்தைப் பெற்று வந்தது.
ஆனால் இப்போது ஆதீத கடன் நெருக்கடியாலும், வர்த்தகம் பெற முடியாத காரணத்தால் அதன் தாய் நிறுவனமான எஸ்.குமார்ஸ் நேஷன்வைய்டு திவாலாக அறிவிக்க நீதிமன்றம் சென்றுள்ளது.
5,000 கோடி ரூபாய் கடன்
இந்தியாவில் தற்போது ஆடம்பர மற்றும் வெளிநாட்டு ஆடை நிறுவனங்கள் அதிகளவில் வந்துள்ள நிலையில் ரெய்டு அண்ட் டெய்லர் பிராண்டுக்கான ஆதிக்கம் குறைந்துவிட்டது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் தாய் நிறுவனமான எஸ்.குமார்ஸ் சுமார் 5,000 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது.
நித்தின் காஸ்லிவால்
எஸ்.குமார்ஸ் நிறுவனத்தின் தலைவரான நித்தின் காஸ்லிவால் கடன் பெற்ற பல வங்கிகளில் திவாலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ வங்கி
எஸ்.குமார்ஸ் நிறுவனத்தின் நிறுவனத்தின் நொடிப்பு (insolvency) நடவடிக்கையை முதல் முறையாக ஐடிபிஐ வங்கி துவங்கியது. இதன் பின் ஈடெல்விஸ் சொத்து மறுகட்டமைப்பு நிறுவனம் ரெய்டு அண்ட் டெய்லர் இந்திய நிறுவனத்தை நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளது.
மறுகட்டமைப்பு
தற்போது ரெய்டு அண்ட் டெய்லர் மற்றும் எஸ்.குமார்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை மறுகட்டமைப்பு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கான தீர்வு திட்டத்தை ஆய்வு செய்ய ஓரே அதிகாரியை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தான் இயங்கி வருகிறது. வர்த்தகம் மற்றும் வர்த்தகச் சந்தை சிறப்பாக இருந்தால் எல்லோரும் கடனை திருப்பிச் செலுத்த முடியும்.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் வர்த்தகச் சந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே நிறுவனங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலாகி வருகிறது பல முன்னணி நிதித்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications