2017ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகத்தைப் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இதன் முலம் ஆயிரம் பிரச்சனைகள் இரு நாடுகள் மத்தியில் இருந்தாலும், வர்த்தகத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்திய ஏற்றுமதி
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 16.34 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்த நிலையில் சீனாவின் ஏற்றுமதி அளவு 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
மொத்த வர்த்தகம்
இந்நிலையில் இருநாடுகளுக்கு மத்தியிலான மொத்த வர்த்தகத்தில் மதிப்பு 2017ஆம் ஆண்டில் 18.63 சதவீதம் வரையில் உயர்ந்து 84.44 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
சாதகமான சூழ்நிலை
மேலும் நடப்பு நிதியாண்டில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் மற்றும் நட்புறவை மேம்படுத்தும் வகையில் சீனாப பல முயற்சிகளைச் செய்து வருகிறது. இதன் வாயிலாக நடப்பு நிதியாண்டில் இருநாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகம் 20 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து 2018இல் 100 பில்லியன் டாலர் வரையில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
100 பில்லியன் டாலர்
2015ஆம் ஆண்டு முதல் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 100 பில்லியன் அடைய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் 2017க்கு முன்பு வரையில் 70 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை மட்டுமே இரு நாடுகளும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications