நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரோட்டோமேக் இந்திய வங்கிகளில் சுமார் 4,000 கோடி ரூபாய் அளவிலான கடன் பெற்றுள்ளது. இந்தக் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில், நிறுவனத்தின் கடனை மறுசீரமைப்புச் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் முதல் 90 நாள் நீட்டிப்பில் மறுசீரமைப்புத் தோல்வி அடைந்துள்ளது.
திவால்
இந்நிலையில் விக்ரம் கோத்தாரி தலைமை வகிக்கும் ரோட்டோமேக் இந்நிறுவனத்தின் இரு கிளை நிறுவனங்களான ரோட்டோமேக் எஸ்போர்ட்ஸ் மற்றும் ரோட்டோமே குளோபல் ஆகியவற்றைக் கடனுக்கான தீர்வு காணாத பட்சத்தில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
180 நாள்
ரோட்டோமேக் குழுமத்தின் 4,000 கோடி ரூபாய் மோசடிக்கான கடன் தீர்வை 180 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். இதற்கான காலம் வருகிற மார்ச் 19ஆம் தேதி முடிவடைகிறது.
IBC சட்டத்தின் கீழ் இதன் காலம் அதிகப்படியாக 90 நாட்கள் வரையில் நீட்டிக்கப்படலாம்.
அனில் கோயல்
ரோட்டோமேக் நிறுவனங்களுக்கான தீர்வு காணும் பொறுப்பு அனில் கோயல் கூறுகையில், தீர்வு காணுவதற்கான காலம் எதுவும் இதுவரை நீட்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications