மதுபான உற்பத்தியாளர் மற்றும் நாட்டின் முன்னணி வர்த்தகத் தலைவராக இருந்த விஜய் மல்லையா தற்போது கடன் தொல்லையின் காரணமாக லண்டனில் தலைமறைவாகி தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விஜய் மல்லையா சுமார் 9,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். தற்போது இவரது பெயரில் இருக்கும் 12,400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மற்றும் பங்கு இருப்புகளை விற்பனை செய்வதன் மூலம் கடன் நிலுவை அடைக்க முடியும் என யுனைடெட் பிரீவரீஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிங்பிஷர் நிறுவனத்திற்குக் கடன் பெற்ற விஜய் மல்லையாவிற்கு யுனைடெட் பிரீவரீஸ் தான் உத்தவாதம் அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது யுனைடெட் பிரீவரீஸ் மற்றும் அமலாக்கத் துறை இணைந்து மல்லையாவின் சொத்து மற்றும் பங்கு இருப்புகளைக் கொண்டு எப்படிக் கடனை அடைப்பது என ஆலோசனை செய்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் இதன் மதிப்பு 13,400 கோடி ரூபாயில் இருந்து 12,400 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications