மும்பை: காதி துறையில் இருந்து ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். அன்மையில் மக்களவைவில் வெளியான தகவலின் படி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இருந்து 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையில் காதித் துறையில் 7 லட்சம் ஊழியர்கள் பணியை விட்டு வெளியேறியுள்ளது.
ஆனால் இந்தத் தரவுகளை ஆராய்ந்து பார்த்த போது ஊழியர்கள் வெளியேறிய எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சரிந்த வேலைவாய்ப்பு
2015-ம் ஆண்டு வரை 11.6 லட்சமாக இருந்த காதி ஊழியர்கள் எண்ணிக்கை 2015-2016 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் 7 லட்சம் குறைந்து 4.6 லட்சமாக உள்ளது. ஆனால் இதில் எத்தனை வேலை வாய்ப்புகள் புதிய தொழில்நுட்பங்களினால் போனது என்பது தெரியவில்லை.
உற்பத்தி
வேலை வாய்ப்புகள் சரிந்த 2015-2016 மற்றும் 2016-2017 நிதி ஆண்டில் காதி பொருட்கள் உற்பத்தியானது 31.6 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதிய தொழில்னுட்பங்களை
காதி மற்றும் கிராமப்புற தொழில் துறை ஆணையம் இரண்டில் இருந்தும் 2015-2016 நிதி ஆண்டில் எவ்வளவு ஊழியர்கள் வெளியாகி இருப்பார்கள் என்பது தெரியாது. அவை உன்மையான தரவுகளாகவும் இருக்காது. அந்தக் காலகட்டத்தில் புதிதாக ஊழியர்கள் பணிக்கு புதிதாகவும் எடுக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புற காதி தொழில்துறை ஆணையமானது பழைய தொழில்னுட்பங்களை மாற்றிப் புதிய தொழில்னுட்பங்களை அறிமுகம் செய்துள்ளதாலும் பணி இழப்புகள் அதிகமாகியுள்ளது.
முக்கிய மாநிலங்கள்
உத்தர்காண்ட், உத்தர் பிரதேஷ், சட்டிஷ்கர், மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் 3.2 லட்சம் வேலை இழப்புகள் காதி துறையில் நடைபெற்றுள்ளன. பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒதிசா, அந்தமான் & நிக்கோபார் ஆகிய இடங்களில் 1.2 லட்சம் வேலை வாய்ப்புகள் இழப்பு காதி துறையில் ஏற்பட்டுள்ளன.
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டம்
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தில் 2016-2017 நிதி ஆண்டில் உருவாக்கப்பட்ட 4.1 வேலை வாய்ப்பானது 2017-2018 நிதி ஆண்டில் 3.2 லட்சமாகச் சரிந்துள்ளது.
2017-2018 நிதி ஆண்டின் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின் முதல் 10 மாதங்களில் 2.5 லட்சம் ஊழியர்களுக்கு வேலைக் கிடைத்துள்ளது. பிரதம மந்திரி வேலை வாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் துவங்குபவர்களுக்குக் கிராமப்புறங்கள் மற்றும் புற நகரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு மானியம் போன்றவையும் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications