நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் பல்வேறு காரணங்களுக்காகத் தனிப்பட்ட NCD மற்றும் வெளிநாட்டு நாணய பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சுமார் 16,500 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதற்காகப் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
எதற்காக இந்தத் திடீர் நிதிதிரட்டல்..!
ஜியோவின் அறிமுகம் மற்றும் வர்த்தகச் சரிவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பார்தி ஏர்டெல் தனது கருவூல இயக்கத்திற்காவும், கடன் மற்றும் ஸ்பெக்டரம் நிலுவையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக மறு நிதியியல் திட்டத்தின் மூலம் இதனைச் சரிசெய்ய நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஒப்புதல்
ஏர்டெல் நிர்வாகம் தற்போது அளிக்கப்பட்டுள்ள ஒப்புதலின் படி 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான NCD பத்திரங்களைத் தனிப்பட்ட முறையில் பகுதியாகவும், வரிசையாகவும் வெளியிட முடிவு செய்துள்ளது.
இதன் மதிப்பைப் பத்திரங்கள் வெளியிடும் போது கணக்கிட்டுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணய பத்திரங்கள்
1 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது 6,482 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு நாணய பத்திரங்களை ஒரே முறை அல்லது பல்வேறு பகுதிகளாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிகப்பெரிய திட்டம்
இதுவரை ஏர்டெல் நிர்வாகம் ஒப்புதல் அளித்த நிதி திரட்டும் திட்டத்தை விடவும் தற்போது அதிக மதிப்பிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ஏர்டெல் நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் எனவும் ஏர்டெல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குச்சந்தை
அறிவிப்பின் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் 4.68 சதவீதம் வரையில் உயர்ந்து 420.75 ரூபாய் என்ற அளவை அடைந்துள்ளது.
மொத்த கடன்
சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் நிறுவனம் சுமார் 91,714 கோடி ரூபாய் அளவிலான கடனில் உள்ளது. இது டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் நிலவரம்.
பார்தி இன்பராடெல்
ஜியோ உடனான போட்டியைச் சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் தனது டவர் நிறுவனமான பார்தி இன்பராடெல் நிறுவனத்தின் பங்குகள், சொத்து விற்பனை எனப் பல்வேறு வழிகளில் சுமார் 12,089 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏர்டெல் வாயிலாக 16,500 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஜியோ
ஆனால் ஜியோ நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் -இன் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து நிதி முதலீட்டை புதுபுது திட்டத்திற்காகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
சமீபத்தில் முகேஷ் அம்பானி செய்ய அமெரிக்க முதலீடு பற்றித் தெரியுமா உங்களுக்கு..?
அமெரிக்க முதலீடு
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications