உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வீடியோ இணையதளமான நெட்ஃபிளிக்ஸ் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளில் ரிலையன்ஸ் ஜியோவின் சேவையை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய மொபைல் டேட்டா புரட்சியைச் செய்துள்ளது என்று அனைவரையும் ஒப்புக்கொள்ள வைக்கும். அவ்வளவு குறைந்த விலைக்கு இணையதளத் தரவுகளை இந்திய டெலிகாம் நிறுவனங்கள் விற்க ஜியோ தான் காரணம்.
எல்லா நாடுகளிலும் ஜியோ
இந்தியாவில் ஜியோ நிறுவனம் இணையதளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையினைப் பெரும் அளவில் அதிகரித்தது. இதே போன்று எல்லா நாடுகளிலும் ரிலையன்ஸ் ஜியோ சேவையினை யாராவது வழங்கினால் நன்றாக இருக்கும் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார்.
ஜியோ
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ சேவையானது 2016 செப்டம்பர் மாதம் முதல் துவங்கப்பட்டது. ஜியோ 6 மாதங்கள் வரை வாடிக்கையாளர்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி வந்த நிலையில் இணையதளம் மூலம் வணிகம் செய்து வரும் பலருக்கும் அதிக லாபத்தினை அளித்துள்ளது.
இணையதள ஸ்ட்ரீமிங் சேவைகள்
இந்தியாவில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இணையதள வீடியோ சேவை நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு நெட்பிளிக்ஸ், அமேசான் மற்றும் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.
கேபிள் டிவி
இந்தியாவில் உள்ள கேபிள் நிறுவனங்கள் பல விளம்பரம் சார்ந்து இயங்கி வரும் நேரத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளம்பரம் ஏதும் இல்லாமல் திரைப்படச் சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் 500 ரூபாய் கட்டணத்தில் ஆங்கிலத் திரைப்படங்கள் நிகழ்ச்சிகள் மட்டும் தான் இந்த நிறுவனத்தின் சேவையாக உள்ளது.
நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான்
நெட்பிளிக்ஸ் இந்தியா வந்த பிறகு அமேசான் நிறுவனம் தனது சேவையை அளிக்கத் துவங்கினால் உள்ளூர் மொழி திரைப்படங்கள், ஆங்கிலத் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் எனப் பயனர்களைப் பெரும் அளவில் குவித்துள்ளது. 2017-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனமானது 11.7 பில்லியன் டாலர் வருவாயினைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications