நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோரின் நிறுவனங்களுக்குக் கொடுத்த ஒப்புதல் கடிதத்தின் வாயிலாகச் சுமார் 30 வங்கிகள் நம்பிக்கையின் பெயரில் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளது.
இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி வங்கியில் பெற்ற கடனை மோசடி செய்துள்ளதன் வாயிலாக இந்தப் பணத்தைப் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த 30 வங்கிகளில் சில வெளிநாட்டு வங்கி நிறுவனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு அதிகளவில் கடன் கொடுத்தவர்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவையாகும்.
இந்நிலையில் தான் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி வர்த்தகத்திற்காக உட்செலுத்த உள்ளது. இந்த நிதி மூலம் துவண்டுபோன வங்கித்துறை மீண்டும் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications