2016-2017 நிதி ஆண்டில் இந்தியன் ஆயில், ஓஎன்ஜிஎஸ்சி மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிய பொதுத் துறை நிறுவனங்கள் ஆகும். அதே நேரம் பிஎஸ்என்எல், ஏர்இந்தியா மற்றும் எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் அதிக நட்டத்தினை அளித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக நட்டம் அளித்த டாப் 10 பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் பிஎஸ்என்எல், ஏர்இந்தியா மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மட்டும் 55.66 சதவீத நட்டத்தினை அளித்துள்ளன.

லாபம் அளிக்கும் டாப் 10 பொதுத் துறை நிறுவனங்கள் பட்டியலில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் 19.69 சதவீதமும், ஓஎன்ஜிஎஸ்சி 18.45 சதவீதமும், கோல் இந்தியா நிறுவனம் 14.94 சதவீதமும் கூடுதல் வருவாயினைப் பெற்றுள்ளன.
பொதுத் துறைகளில் 174 நிறுவனங்கள் லாபம் அளித்துள்ளதாகவும் அதில் டாப் 10 நிறுவனங்கள் மட்டும் 63.57 சதவீதத்தினைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications