ஏப்ரல் 1 முதல், வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்.. சமானியர்கள் கவனிக்க வேண்டியவை..!

2018ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி குறித்த மாற்றங்கள் வருமான வரி செலுத்துவோருக்கு சில சாதகங்களையும், பாதகங்களையும் கொண்டு வரவுள்ளன.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வரிதொடா்பான மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வருவதற்கு முன்னால் அதனைப் பற்றி அறிந்துகொள்வது, நம்முடைய நிதிசார் திட்டமிடலுக்கு உதவியாக இருக்கும்.

2018 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள வருமான வரி தொடர்பான நான்கு முக்கிய மாற்றங்கள்.

 1. கல்வி வரி உயர்வு

1. கல்வி வரி உயர்வு

இதுவரை, வருமான வரியாக நாம் செலுத்துகின்ற மொத்தத் தொகையில் 3% தொகை கணக்கிடப்பட்டுக் கல்வி வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் 2% தொகை கல்வி வரியாகவும் 1% தொகை சீனியா் இடைநிலைக் கல்வி வரியாகவும் அடங்கும். தற்போது இந்த வரி 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோருக்கு இது கூடுதல் சுமையாக அமையும்.

2. மாத ஊதியம் பெறுவோருக்கு 40,000 ரூபாய் நிலையான கழிவு

2. மாத ஊதியம் பெறுவோருக்கு 40,000 ரூபாய் நிலையான கழிவு

வருமானவரி செலுத்தும் மாதச் சம்பளதாரா்கள் பயன்பெறும் வகையில் நிலையான கழிவுத்திட்டம் பலஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. பின்னர் அது நீக்கப்பட்டது. தற்போதைய பட்ஜெட்டின் மூலமாக மீண்டும் அது நடைமுறைக்கு வந்துள்ளது. வருமானவரி செலுத்துவதற்கான மொத்தக் கணக்கீட்டுத் தொகையில் 40000 ரூபாய்க்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். இதுவும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதால் வருமான வரி செலுத்துவோர் இப்பயனை முழுமையாக அனுபவிப்பதில் சிக்கல்கள் உள்ளன.

3. மருத்துவம் மற்றும் பயணச் செலவுகளின் மீதான வரிவிதிப்பு

3. மருத்துவம் மற்றும் பயணச் செலவுகளின் மீதான வரிவிதிப்பு

இதற்கு முன்பு, ஒரு ஆண்டுக்கான பயணப்படியில் 15000 ரூபாய்க்கும் மருத்துவச் செலவில் 19200 ரூபாய்க்கும் வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போதைய பட்ஜெட் அறிவிப்பின்படி, இவ்விரண்டு வகையான செலவினத் தொகைகளும் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. வரி செலுத்துவோர் எத்தகைய வரிவிதிப்பு வரம்புக்குள் (Taxation Slab) வருகிறார்கள் என்பதைப் பொறுத்து இவை மீதான வரிவிதிப்பு அமையும்.

4. நீண்டகால முதலீட்டு வருவாய்க்கான வரிவிதிப்பு

4. நீண்டகால முதலீட்டு வருவாய்க்கான வரிவிதிப்பு

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நீண்டகால முதலீட்டுப் பங்காதாய வருமானத்துக்கு 10% வருமான வரி விதிக்கப்படவிருக்கிறது. சில ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாமலிருந்த இவ்வரிவிதிப்பு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பங்கு வர்த்தகத்தோடு இணைந்த பரஸ்பர நிதியின்மூலம் கிடைக்கும் பங்காதாயத்துக்கும் 10% வரி விதிக்கப்படும்.

அதிகம் பயன்பெறும் மூத்த குடிமக்கள்

அதிகம் பயன்பெறும் மூத்த குடிமக்கள்

ஓய்வுக் காலத்தில் இருக்கும் மூத்த குடிமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் அமைந்துள்ளன. வரிச்சலுகைகளும் வரி விலக்குகளும் அவர்களுக்குப் பயன்பெறும் வகையில் உள்ளன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+