ஆயுத இறக்குமதியில் இந்தியாதான் டாப்பு.. மேன் இன் இந்தியா தோல்வியின் எதிரொலி..!

இந்தியாவில் ஆயுதங்கள், ராணுவ கப்பல் மற்றும் போர் விமானங்களைத் தயாரிப்பதற்காக மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தைப் பெரிய அளவில் விளம்பரம் செய்து பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க முடிவு செய்யது. ஆனால் இத்திட்டம் வெற்றி அடையவில்லை.

இத்திட்டத்தின் துவக்கத்தில் வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தால் பாதுகாப்புத் துறை சார்ந்த பல ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்காக உரிமங்களை அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்பரா மற்றும் அதன் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் டிபென்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை.

எதற்காக இந்த முயற்சி..?

எதற்காக இந்த முயற்சி..?

இந்திய பாதுகாப்பு துறைக்குத் தேவையான ஆயுதங்கள், ராணுவ கப்பல் மற்றும் போர் விமானங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம். இதற்காக இந்திய அரசு ஒவ்வொரு முறையும் பல ஆயிரம் கோடிகளைச் செலவிடுகிறது.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

இந்நிலையில் இறக்குமதி அளவைக் குறைத்து இந்தியாவிலேயே இதனை உற்பத்தி செய்தால் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும், அதேபோல் ஆயுதங்களுக்காக அதிகளவிலான தொகையை முதலீடு செய்யத் தேவையில்லை.

தோல்வி

தோல்வி

இதனை மையமாக வைத்து சுமார் 25 துறைகளை இத்திட்டத்திற்குள் கொண்டு வந்து நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க மோடி தலைமையிலான அரசு 2014ஆம் ஆண்டுச் செப்டம்பர் 25ஆம் தேதி மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

எதிர்பார்த்த அளவிற்கு இத்திட்டம் வெற்றி அடையவில்லை, குறிப்பாகப் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி திட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. இதன் எதிரொலி என்ன தெரியுமா..?

 

இந்தியா

இந்தியா

2013-17 இடைப்பட்ட காலத்தில் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் சுமார் 12 சதவீதம் இந்தியா செய்துள்ளது. இதன் மூலம் உலகளவில் ஆயுத இறக்குமதியில் இந்திய முதல் இடத்தில் உள்ளது.

இது மேக் இன் இந்தியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

24 சதவீத வளர்ச்சி

24 சதவீத வளர்ச்சி

உலகளாவிய ஆயுத விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் ஸ்டாக்ஹோல்ம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவின் ஆயுத இறக்குமதி அளவு 2008-12 மற்றும் 2013-17 ஆகிய இடைப்பட்ட காலத்தில் சுமார் 24 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

கூட்டாளிகள்

கூட்டாளிகள்

2013-17 காலத்தில் இந்தியா செய்ய ஆயுத இறக்குமதியில் 62 சதவீதம் ரஷ்யாவிடம், 15 சதவீதம் அமெரிக்காவிடமும், 11 சதவீதம் இஸ்ரேல் நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்துள்ளது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இந்தியாவைத் தொடர்ந்து அதிகளவிலான ஆயுத இறக்குமதி செய்தது சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு நாடுகள், சீனா, ஆஸ்திரேலியா, அல்ஜீரியா, ஈராக், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை இடம்பெற்றுள்ளது.

 அமெரிக்கா

அமெரிக்கா

பொதுவாக இந்தியா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்தே ஆயுதங்களை வாங்க விரும்புகிறது. ஆனால் ஆசிய சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், இந்தியாவின் நட்புறவை வலிமைப்படுத்தவும் அமெரிக்காவில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யதாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

2008-12 மற்றும் 2013-17 இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களின் மதிப்பு சுமார் 557 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

ஏற்றுமதியாளர்கள்

ஏற்றுமதியாளர்கள்

உலகளவில் அதிகளவிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி திகழ்கிறது. ஆனால் சமீபகாலமாகச் சீனா ஆயுத உற்பத்தியில் தனிப்பட்ட கவனத்தை ஈர்த்து வருவதால் டாப் 5 ஆயுத ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் சீனா இடம்பெற்றுள்ளது.

சீனா

சீனா

தற்போது சீனா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு ஆயுதங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.

சாயம் வெளுத்தது

சாயம் வெளுத்தது

 அனில் அம்பானி

அனில் அம்பானி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+