மொத்த மதிப்புச் சேர்ப்பு - ஜிவிஏ என்றால் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ஆனது மத்திய புள்ளியல் துறை அலுவலகத்தால் மதிப்பிடப்படுகிறது. நிதியாண்டு கடமைகள் மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை சட்டம் 2003 மற்றும் இதர விதிகளின் கீழ் ஜிடிபி மதிப்பிடப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சகம், இந்த ஜிடிபியை கருத்தில் கொண்டு நிதியாண்டுக்கான இலக்குகளை நிர்ணயிக்கிறது. இதற்காக, மத்திய நிதி அமைச்சகம் பின்வரும் வருடங்களுக்கான ஜிடிபியை முன்கூடியே கணித்து, தனது நிதியாண்டுக்கான இலக்குகளைக் குறிக்கிறது.

2015 ஜனவரி மாதம், மத்திய புள்ளியல் நிறுவனத்தால் தேசிய கணக்குப் புள்ளிவிவரங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது துறைவாரியான மதிப்பீடுகளைச் செய்யும் போது மொத்த மதிப்புச் சேர்ப்பு-ஐ (Gross Value Added -ஜிவிஏ) பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது. அவ்வாறே, ஜிவிஏ செயல்பாட்டிற்கு வந்தது.

மொத்த மதிப்புச் சேர்ப்பு (ஜிவிஏ) என்றால் என்ன?
 

மொத்த மதிப்புச் சேர்ப்பு (ஜிவிஏ) என்றால் என்ன?

பொருளாதாரத்தைப் பொறுத்த வகையில், ஜிவிஏ என்பது குறிப்பிட்ட பகுதி அல்லது தொழிற்சாலை அல்லது பொருளாதாரத் துறையில் உற்பத்தி செய்யப்படும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பீடு ஆகும்.

தேசிய கணக்கீடுகளின் படி, ஜிவிஏ என்பது மொத்த உற்பத்தியில், இடை நுகர்வைக் கழித்தல். இது தேசிய கணக்கையும், உற்பத்தி கணக்கையும் நிலைப்படுத்தும் ஒன்று.

மொத்த மதிப்புச் சேர்ப்பு என்பது உற்பத்திக்கான குறியீடு. இது உற்பத்தியாளர், துறை மற்றும் பகுதியின் பொருளாதாரப் பங்களிப்பை குறிக்கிறது.

நிறுவன மட்டத்தில் (At Company Level)

நிறுவன மட்டத்தில் (At Company Level)

ஒரு நிறுவனம் தற்போது வழங்கும் அல்லது உற்பத்தி செய்யும் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைக் கணக்கிட்டு மொத்த மதிப்புச் சேர்ப்பு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த ஜிவிஏ மூலம் ஒரு நிறுவனத்தின் நிலையான மதிப்பிற்கு, பொருள் அல்லது சேவையின் பணம் எவ்வளவு பங்களிக்கிறது, அதன் மூலம் எவ்வளவு குறைந்தபட்ச லாபம் எனக் கண்டறியலாம்.

நிறுவனத்தின் நிலையான மூலதனம் மற்றும் தேய்மானத்தின் மதிப்பைக் கழித்தால், அதன் குறைந்தபட்ச நிகரமதிப்பை தெரிந்து கொள்ளலாம்.

நாடு மட்டத்தில் (At Country Level)

நாடு மட்டத்தில் (At Country Level)

மொத்தமதிப்புச் சேர்ப்பு என்பது நாட்டின் மொத்த உற்பத்தியில் இடைக்கால நுகர்வைக் கழிப்பது ஆகும். மேலும், இது மொத்த உற்பத்தி மற்றும் நிகர உற்பத்திக்கான வேறுபாடே. இந்த ஜிவிஏ , நாட்டின் பொருளாதார நிலையைக் குறிக்கும் முக்கியக் குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) கணக்கிடப் பயன்படுகிறது.

ஜிவிஏ-ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள்
 

ஜிவிஏ-ன் வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் காரணங்கள்

ஜனவரி 2015 ல், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம், 2004-05 முதல் 2011-12 அடிப்படை ஆண்டுகளில் திருத்தம் செய்து, தேசிய கணக்கின் புதிய பகுதியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மதிப்பு காரணியின் ஜிடிபிக்கு பதிலாக ஜிவிஏ பயன்படுத்தப்பட இருக்கிறது.

தற்போது, சந்தை மதிப்பிலான ஜிடிபி, அரசு கணக்குகளில் உள்ள ஜிடிபியை குறிக்கிறது. இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் தேசிய கணக்கீடு 2008 மற்றும் பிரனாப் சென் கமிட்டியின் பரிந்துரைகளின்படி மாற்றப்பட்டது.

இந்த மாற்றம், இந்தியாவின் ஜிடிபியை, இதர வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட உதவும்.

மொத்த மதிப்புச் சேர்ப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

மொத்த மதிப்புச் சேர்ப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஜிவிஏ-ஆனது, பொருட்களின் மீதான வரி மற்றும் மானியத்தின் வாயிலாக ஜிடிபியுடன் தொடர்புடையது.

ஜிவிஏ கணக்கீடு:

ஜிவிஏ கணக்கீடு:

மொத்த மதிப்புச் சேர்ப்பு = மொத்த உள்நாட்டு உற்பத்தி + பொருட்களின் மீதான மானியம் - பொருட்களின் மீதான வரி

 அடிப்படை விலையில் ஜிவிஏ

அடிப்படை விலையில் ஜிவிஏ

எந்தவொரு பொருளுக்கும், அடிப்படைவிலை என்பது வாங்குவோர், உற்பத்தியாளர்களுக்குத் தரும் விலை மற்றும் அதற்கான மானியத்தின் கூடுதலில், வரியைக் கழித்தால் கிடைப்பதாகும்.

அடிப்படை விலையின் ஜிவிஏ = காரணி மதிப்பின் ஜிவிஏ +( உற்பத்தி வரி - உற்பத்திக்கான மானியம்)

காரணி மதிப்பிற்கான ஜிவிஏ

காரணி மதிப்பிற்கான ஜிவிஏ

காரணி மதிப்பிற்கான ஜிவிஏ, வரி மற்றும் மானியத்திற்கு உட்பட்டதல்ல.

சந்தை விலையின் ஜிடிபி

சந்தை விலையின் ஜிடிபி

சந்தை விலைக்கான ஜிடிபி என்பது, உற்பத்தி மற்றும் பொருளுக்கான வரியை உள்ளடக்கியது. ஆனால், அவற்றுக்கான மானியத்தை உள்ளடக்கியதல்ல.

சந்தை விலைக்கான ஜிடிபி = அடிப்படை விலையின் ஜிவிஏ + பொருளின் வரி - பொருளின் மானியம்

ஜிவிஏ-க்கு ஏன் முக்கியத்துவம்?

ஜிவிஏ-க்கு ஏன் முக்கியத்துவம்?

துறைவாரியான மதிப்பீடுகளை ஜிவிஏ தருவதால், எந்தத் துறைக்கு ஊக்கத்தொகை அல்லது ஊக்கம் அளிப்பது எனக் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு இது உதவும். சிலர் இதைப் பொருளாதாரத்தை மதிப்பிடும் கருவியாகப் பார்க்கிறார்கள். ஏனெனில், அதிக வரிவசூலின் காரணமாக , வெளிப்பாட்டில் தீவிர வளர்ச்சி உள்ளது.

 ஜிடிபியை காட்டிலும் ஜிவிஏ , பொருளாதாரத்தை மதிப்பிடச் சிறந்த அளவீடா?

ஜிடிபியை காட்டிலும் ஜிவிஏ , பொருளாதாரத்தை மதிப்பிடச் சிறந்த அளவீடா?

ஜிவிஏ தருவதால், எந்தத் துறைக்கு ஊக்கத்தொகை அல்லது ஊக்கம் அளிப்பது எனக் கொள்கை தயாரிப்பாளர்களுக்கு ஜிவிஏ உதவும் என்பதால், அதன்படி துறைரீதியான கொள்கைகளை வகுக்கலாம்.

ஜிடிபியை பயன்படுத்தி , பல்வேறு பொருளாதாரங்களின் வருமானத்தை ஒப்பீடு செய்யலாம் என்பதால், நாடுகளுக்கிடையிலான மதிப்பீடுகளைச் செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Gross Value Added?

What is Gross Value Added?
Story first published: Tuesday, March 13, 2018, 19:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X