உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் கடந்த ஒரு மாதத்தில் மற்றும் 89 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினைப் பெற்றுச் சாதனைப் படைத்துள்ளது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனத்திற்கும் இணையானது ஆகும்.
2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமேசான்.காம் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஜெப் பிஸோஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான்.காம்
அமேசான்.காம் நிறுவனப் பங்குகள் 2018 பிப்ரவரி 13 முதல் 2018 மார்ச் 12 வரையில் மட்டும் 13 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 685 பில்லியன் டாலரில் 774 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. பங்குகளின் விலை 1414.51 டாலரில் இருந்து 1898.39 டாலராக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மறுபக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன சந்தை மதிப்பானது 5,89,602.62 கோடியாக உள்ளது. அதாவது 90.63 பில்லியன் டாலர்கள் ஆகும். ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 2017 பிப்ரவரி மாதம் முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து ரிலையன்ஸ் பங்குகள் வேகமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் ஜியோ நிறுவனம் மூன்றாம் காலாண்டில் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.
ஃபோர்ப்ஸ்
ஃபோர்ப்ஸ் அன்மையில் 2018-ம் ஆண்டிற்கான உலகப் பில்லியனர்கர்கள் பட்டியலில் அமேசான் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் பிஸோஸ் 112 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் முதல் இடத்தினையும், இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் ஆன முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 19 வது இடத்தினையும் பிடித்துள்ளதாக அறிவித்து இருந்தது.
வணிகம்
அமேசான் நிறுவனம் இ-காமர்ஸ் துறையில் உள்ள நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பெட்ரோ கெமிக்கல்ஸ், டெக்ஸ்டைல்ஸ், டெலிகாம் போன்ற வணிகங்களைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications