இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 5.22 சதவீதம் வரையில் திடீரெனச் சரிந்தது. இதனால் ஒட்டுமொத்த டாடா குழும முதலீட்டாளர்களும் அதிர்ந்துபோயினர்.
இந்தத் திடீர் சரிவிற்கு முக்கியக் காரணம் டாடா சன்ஸ்.
டாடா சன்ஸ்
டிசிஎஸ்-இன் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 6,853 கோடி ரூபாட் தொகையை ஈவுத்தொகையாக டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதுமட்டும் அல்லாமல் ஜூன் மாதத்தில் சுமார் டிசிஎஸ் நிறுவனத்தின் பைபேக் திட்டத்தின் வாயிலாக 10,278 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
சுமார் 2.6 பில்லியின் டாலர் அளவிலான தொகை கிடைக்கும் டாடா குழுமத்தின் பிற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடைக்க நிதி போதுமானதாக இல்லை.
10 வருடம்
இந்நிலையில் கடந்த 10 வருடத்தில் முதல் முறையாக டாடா சன்ஸ் சுமார் 1.4 பில்லியன் டாலர் அளவிலான டிசிஎஸ் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாகவே டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் 5.22 சதவீதம் வரையில் சரிந்தது.
இதோடு 1.5 பில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெறவும் டாடா சன்ஸ் முடிவு செய்துள்ளது. எதற்காக இவ்வளவு நிதி சேர்க்கப்படுகிறது.?
டெலிகாம் வர்த்தகம்
தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் சேகரித்துள்ள நிதியில் பெரும் பகுதி தனது டெலிகாம் சேவை நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் பெற்ற கடன் மற்றும் இதர நிலுவை தொகையைத் தீர்க்கப் பயன்படுத்த உள்ளது.
இது தொடருமா..?
இந்நிலையில் டாடா குழுமத்தில் டெலிகாம் சேவை போலவே இன்னும் சில நிறுவனங்கள் அதீத கடன், குறைந்த வர்த்தகத்திலேயே உள்ளது. இதனைச் சரி செய்யவும் டிசிஎஸ் பங்குகளை விற்பனை செய்யுமா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
இப்படித் தொடர்ந்து விற்பனை செய்தால் டிசிஎஸ் முதலீட்டாளர்களின் நிலை மிகப்பெரிய சிக்கலில் இருக்கும்.
தங்க முட்டை
இந்தக் கூடுதல் நிதியின் மூலம் டாடா குழுமத்தின் பிற வர்த்தகத்தை ஊக்குவிக்கும் போதும், நீண்ட கால நோக்கில் டாடா குழும முதலீட்டாளர்கள் அதிகளவிலான நன்மையை அடைவார்கள்.
இதன் மூலம் அடுத்த 5 அல்லது 10 வருடத்தில் டாடா குழுமம் தங்க முட்டையிடும் கோழியாக மாறும்.
உதாரணமாக
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு Thyssenkrupp உடனான கூட்டணியைப் போல், டாடா மோட்டார்ஸ் வர்த்தகத்திற்கு ஜாகுவார் லேண்டு ரோவர் போல் சில முக்கிய வர்த்தக வழிகள் உருவாகும்.
டிசிஎஸ் ஆதிக்கம்
டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்குப் பங்கு இருப்புகளை வைத்திருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு வருடாந்திர அடிப்படையில் மொத்த ஈவுத்தொகை வருமானத்தில் 92 சதவீதம் டிசிஎஸ் நிறுவனத்தின் வாயிலாகத் தான் வருகிறது.
இதேபோல் மொத்த வருவாயில் 86 சதவீதம் டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து தான் வருகிறது.
டாடா குழுமம்
ஆக மொத்த டாடா குழுமமும் டிசிஎஸ் என்னும் ஒற்றை நிறுவனத்தை மட்டுமே நம்பி இயங்கி வருகிறது என்றால் மிகையாகாது.
இந்நிலையை மாற்ற டிசிஎஸ் நிறுவனப் பங்குகளை விற்றுப் பிற வர்த்தகத்தை உயர்த்துவது சரியான முடிவாகத் தான் தோன்றுகிறது.
சாதித்துக் காட்டிய சந்திரசேகரன்
அதிரடி முடிவு
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications