2017-2018 நிதி ஆண்டு வருகின்ற மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் 2018 மார்ச் 15-ம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் இன்று துணை முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் 2018-2019 நிதி ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட்டினை தாக்கல் செய்ய இருக்கிறார்.

தமிழக பட்ஜெட் 2018-ஐ வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தாக்கல் செய்யப்படும் என்று மாநில அரசின் பத்திரிக்கை வெளியீட்டில் மார்ச் 7-ம் தேதி குறிப்பிட்டு இருந்தனர்.
முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்து இருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை ஜெயகுமார் தாக்கல் செய்து இருந்தார். ஆனால் இப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரு அதிமுக அணிகளும் இணைந்துள்ள நிலையில் மீண்டும் ஓ பன்னீர் செல்வம் 2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்ய இருக்கிறார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். சினிமா டிக்கெட் மீதான பொழுதுபோக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் கூறி வருகின்றனர்.
மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ இருவரும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு எதிராக உள்ள நிலையில் உத்திர பிரதேசம் போன்று சில மாநிலங்கள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ள நிலையில் தமிழக அரசு தள்ளுபடி செய்யுமா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதுமட்டும் இல்லாமல் பள்ளி கல்வித் துறைக்குப் புதிய திட்டங்கள், பொது மக்களுக்கு என்ன மாதிரியான புதிய திட்டங்கள் எல்லாம் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர் கட்சியான திமுக பெரும்பான்மை இல்லா ஆளும் கட்சி அதிமுக என அவர்களை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications