தமிழ்நாட்டு மாநிலத்திற்கு 3.55 லட்சம் கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய அளவிலான கடன் சுமை இருந்தாலும், 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவின் 8 சதவீத வளர்ச்சி கணிப்புகளைக் காட்டிலும் அதிகமாக அதாவது 9 சதவீதம் வரையில் வளர்ச்சியை அடையும் எனத் தமிழ்நாட்டு நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் குறைந்துள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா.?
மானியம், உதவித்தொகை
2018-19ஆம் நிதியாண்டில் தமிழக அரசு மானியம், உதவித்தொகைக்காகச் சுமார் 75,723 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ. 20,627 கோடியாக இருக்கும் எனக் கணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சம்பளம்
அரசு ஊழியர்களுக்காக அளிக்கப்படும் சம்பளத்திற்கான செலவுகளுக்காக ரூ. 52, 171 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருவாய் பாதிப்பு
நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நினைவு இல்ல
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தமிழக அரசு சுமார் 20 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்மொழி
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும். இதுமட்டும் அல்லாமல் தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 2 கோடி ஒதுக்கப்படும்.


Click it and Unblock the Notifications