பண்டிகை காலங்களில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்துக்கு 490.45 ரூபாய் கோடி திட்டமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லேப்டாப்பிற்கு 758 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மனைப்பட்டா
வீடு இல்லா ஏழை மக்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஹார்டுவேர்டு பல்கலைக்கழகம்
ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்காகத் தனி இருக்கையை ஏற்படுத்த 10 கோடி ரூபாயைத் தமிழக அரசு வழங்கியுள்ளது என்று பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் நினைவுகூர்ந்துள்ளார்.
மருத்துவக் காப்பீடு திட்டம்
ஏழை மக்களுக்கு இலவச மருத்துச் சிகிச்சை அளிக்க உதவி செய்து வரும் மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு 1,361.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சி அமைப்பு வார்டுகள் மறு வரையறை செய்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இதற்காக 172.27 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளுக்கு 1074 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications