இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் புதன்கிழமை தங்களுக்குப் பொதுத் துறை வங்கிகள் மீது மிகவும் குறைவான அதிகாரம் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இடையில் ஒரு சம நிலையான அதிகாரத்தினை அளிக்க வேண்டும் என்றும் பட்டேல் ஆலோசனை வழங்கி உள்ளார்.

ரிசர்வ் வங்கியால் பொதுத் துறை வங்கிகளின் அனைத்துச் செயல்பாடுகளை அணுக முடியவில்லை. ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு என இரண்டு தரப்பும் பொதுத் துறை வங்கிகளைக் கூட்டாகக் கட்டுப்படுத்தவது மற்றும் அதிகப் பங்குகள் மத்திய அரசிடம் உள்ளது தான் இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அன்மையில் நடைபெற்ற மோசடிக்கு இதுவும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.
குஜராத் சட்ட பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய உர்ஜித் பட்டேல் பொதுத் துறை மற்றும் தனியார் துறை வாங்கிகளை ஆராயச் சம அளவிலான அதிகாரத்தினை ரிசர்வ் வங்கிக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடைபெற்ற மோசடி குறித்துப் பெயர் குறிப்பிடாமல் சாடிய உர்ஜித் பட்டேல் வங்கி மோசடிகள் எங்களை மிகவும் பாதிக்கிறது என்றும் கோபத்தினை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார். வங்கி மோசடிகள் ஒரு நாட்டின் எதிர்காலத்தினைச் சிதைக்கக் கூடிய செயல் என்றார்.
2018 மார்ச் 14-ம் தேதி முதல் இந்திய ரிசர்வ் வங்கி LoUs மற்றும் LoCs என்ற இரண்டு வங்கி உத்தரவாத கடன் சேவைகளையும் உடனடியாக வாப்பஸ் பெறுவதாக அறிவித்தது.


Click it and Unblock the Notifications