வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக மானிய விலையில் ஸ்கூட்டர் அளிக்கும் திட்டமானது அன்மையில் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இளைஞர்களுக்கான ரூபாய் 38 கோடியில் செலவில் நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பிரிவுகள் துவங்கப்படும். 2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது தெரிவித்துள்ளார்.
விவசாயிகள்
சர்க்கரை ஆலை லாபத்தில் இருந்து விவசாயிகளுக்குப் பங்கு வழங்கப்படும். இதனால் கரும்பு விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
தானியங்கள்
110 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்குக்குத் தமிழ் நாடு அரசு உதவி செய்யும்.
வேளாண் துறை
ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும் என்றும் வேளாண் துறைக்கு 8916 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
உணவு பூங்கா
திண்டிவனம் அருகே உள்ள பெலாக்குப்பத்தில் உணவுப் பூங்கா அமைக்கப்படும். மேலும் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் உணவு பூங்கா அமைக்க வழிவகை செய்யப்படும்.
ஜெயலலிதாவிற்கு நினைவிடம்
முன்னால் முதல் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் 50.80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர். வேதா இல்லத்தினை நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.


Click it and Unblock the Notifications