நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18இல் கணிக்கப்பட்டதை விட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் போக்குவரத்து துறையை மேம்படுத்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
3,000 பஸ்கள்
இந்தியாவில் ஏந்தொரு மாநிலத்தைக் காட்டிலும் இந்தியாவில் போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் திராவிடக் கட்சிகளின் தொலைநோக்கு பார்வை என்றால் மிகையாகாது.
இந்நிலையில் 2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்திற்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். மேலும் 4000 பழைய பேருந்துகளையும் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு வீடு
தனியார் நிலங்களைக் கையகப்படுத்தி ஏழைகளுக்கு இலவசமாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என 2018-19ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
விவசாயம்
2018- 19நிதியாண்டில் 10 லட்சம் ஹெக்டேரில் அளவில் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மருத்துவப் பூங்கா
மருத்துவச் சேவை தரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில், செங்கல்பட்டுப் பகுதியில் மருத்துவப் பூங்கா அமைக்கச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சத்துணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் கல்வி துறையில் புரட்சியை ஏற்படுத்திய சத்துணவுத் திட்டத்துக்குச் சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ரூபாய் அளவிலான நிதியை 2018-19ஆம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை
மாநிலத்தின் சுகாதாரத் துறையை மற்றும் சேவையை மேம்படுத்துவதற்காக 11,638.44 கோடி ரூபாய் அளவிலான நிதியை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை
2017-18ஆம் நிதியாண்டில் ரூ.10,158 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 2018-19ஆம் ஆண்டுக்கு ரூ. 11,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் நடப்பு ஆண்டில் 1,480 கோடி ரூபாய்க் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications