2018-2019 நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் 1.76 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் செலவு 2.04 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் பற்றாக்குறை 17,490 கோடி ரூபாயாக இருக்கும் என்று பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு தமிழக வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
மானியம் மற்றும் ஊக்கத் தொகை
மானியம் மற்றும் ஊக்கத் தொகைக்காக 75,723 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாய் 11,301 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பீடு.
கடன்
1,43,962 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. 2018 மார்ச் மாதம் 3.55 லட்சம் கோடி ருபாயாக தமிழகத்தின் கடன் உள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் 9 சதவீதமாக உயரும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
ஆர் கே நகர் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக நின்று வெற்றிபெற்ற தினகரன் இன்று சசிகலா ஆசியுடன் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்று தனி கட்சி பெயரை அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications