ஹாங் காங்: உலகளவில் காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் ஹாங் காங் நான்காம் இடம் பிடித்துள்ள நிலையில் வீடுகள் விலையும் அங்கு மிக அதிகம். இதனைக் கருத்தில் கொண்டு ஹாங் காங்கினை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் குறைந்த விலையில் சிமெண்ட் டியூபிற்குள் வீடு கட்டும் முறையினை அறிமுகம் செய்துள்ளார்.
இது போன்று டியூப்களில் வீடு இல்லாதவர்கள் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இந்தியா, வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளிலும் தங்கி இருப்பதை நாம் பார்த்து இருப்போம், செய்திகள் மூலமாக அறிந்திருப்போம்.
டியூபிற்குள் சொகுசான வீடு
பெரிய சிமெண்ட் பைப்புகளில் சொகுசாக வீடு மட்டும் முறையினை ஜேம்ஸ் லாவ்ஸ் என்பவர் அறிமுகம் செய்துள்ள நிலையில் இதற்குச் சீன மக்களிடையே பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.
அளவு
ஹாங் காங்கில் உள்ள கியூபிக் வீடுகளை விட இந்த 100 சதர அடி பைப்பு வீடு பெரியதாகத் தான் இருக்கும் என்றும் ஜேம்ஸ் கூறுகிறார். கூண்டு போன்று அல்லது பெட்டி போன்ற சிறிய வீடுகளுக்கு இடையில் இந்த டியூப் வீடுகள் மிகப் பெரிய வரவேற்பினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடியா
கட்டட வடிவமைப்பாளரான ஜேம்ஸ் வேலை நிமித்தமாக இரு கட்டட வடிவமை கவனித்து வந்த போது அதன் அருகில் பயனப்டுத்தப்படால் குப்பையில் கிடந்த ஒரு டியூபினை பார்த்துள்ளார். அப்போது திடீர் என இதனை வீடாக மாற்றலாம் என்ற எண்ணம் வரை அதனை வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார்.
ஓபாடு
100 சதர அடி பைப்பு வீடு திட்டத்திற்கு ஓபாடு என்று ஜேம்ஸ் பெயரிட்டுள்ளார். இந்த வீட்டிற்ள் பெஞ்ச், மெத்தை, அலமாரி, மைக்ரோவேவ் ஓவன், ஏசி, பிரிட்ஜ், கழிவறை எனப் பல வற்றை வைத்து அனைத்து வசதி கொண்ட ஒரு வீடாகவே வடிவமைத்துள்ளார் என்பது சிறப்பம்சம் ஆகும்.
விலை
ஓபாடு வீடு ஒன்றை அனைத்து வசதிகளுடன் 15,000 டாலர் செலவில் கட்டமைக்கலாம் என்றும் வாடைக்கு விடிவதன் பேரில் மாதம் 400 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். இதுபோன்ற ஒரு திட்டத்தினை இந்தியாவில் அதனை விடக் குறைந்த விலையில் கொண்டு வரவும் முடியும்.
இந்தியா
இந்தியாவில் இன்னும் குடிசை வீடுகள் அதிகளவில் உள்ள நிலையில் இதுபோன்ற திட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் டியூபுக்குள்ளும் குடும்பம் நடத்த முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications