பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தியர்கள் அதிகளவில் இணையதள வங்கி சேவையினைப் பயன்படுத்த துவங்கியுள்ள நிலையில் இந்திய சைபர் பாதுகாப்புத் துறைத் தலைவர் இணையதள வங்கி சேவையைப் பயன்படுத்துவதில்லை என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சைபர் பாதுகாப்பு துறையின் தலைவரான குல்ஷான் ராய் இணையதள வங்கி சேவையில் உள்ள சிக்கல்கள் குறித்துத் தனக்குத் தெரியும் எனவே நான் அதனைப் பயன்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மோசடிகள்
நுகர்வோர் விவகார துறை அமைச்சரான ராம் விலாஸ் பாஸ்வான் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குல்ஷான் ராய் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகளில் நடைபெறும் மோசடிகள் மிகவும் சிக்கலானது மற்றும் சரிசெய்யக் கடினம் என்றும் கூறினார்.
டிஜிட்டல் சந்தை
நுகர்வோர் குறைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று எங்களுக்கு எப்படித் தெரியாதோ, அதே போன்று டிஜிட்டல் சந்தைகளுக்கான வரம்புகளை யார் நிர்வகிக்கிறார்கள் என்றும் யாருக்கும் தெரியாது என்று குல்ஷான் குறிப்பிட்டார்.
எப்படி குல்ஷானால் இது முடிகிறது?
சிறிய அளவில் பணத்தினைத் தனியாக எடுத்த வைக்கத் தன்னிடம் வேறு ஒரு வங்கி கணக்கும் அதற்கு டெபிட் கார்டு வைத்துள்ளதாகவும். அதில் அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை எடுத்து வைத்துத் தேவைப்படும் போது டெபிட் கார்டு பயன்படுத்திப் பரிவர்த்தனைகளைச் செய்துகொள்வதாகவும் அதனால் தான் தேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம் நாடவேண்டிய அவசியமும் இல்லை என்றார்.
சைபர் குற்றம்
ஐபிஎம் நிறுவனம் அன்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்தியாவில் சைபர் குற்றம் அதிகரித்து வருவதாகவும், 2017-ம் ஆண்டு இந்திய நிறுவனங்களில் 12.3 சதவீதம் வரை தகவல் திருட்டு அதிகரித்துள்ளதாகவும், 2016-ம் ஆண்டு 97.3 மில்லியன் ரூபாயாக இருந்த இணையதள மோசடி 2017-ம் ஆண்டு 110 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications