ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பால் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்தாலும், கடந்த ஒரு வருடத்தில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வு ஆச்சரித்தை அளிக்கிறது.
இந்த ஒரு வருட காலத்தில் பல துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் அதிகளவிலான வளர்ச்சி அடைந்திருந்தாலும், பங்குச்சந்தை முதலீடு துறையில் இருக்கும் சில நிறுவனங்கள் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதில் ஒருவர்தான் நிர்மல் ஜெயினும், தற்போது இவர் மும்பை பங்குச்சந்தையில் புதிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.
நிர்மல் ஜெயின்
உலகிலேயே வேகமாக வளரும் சந்தையில் புதிய பணக்காரராகத் திகழ்கிறார் நிர்மல் ஜெயின்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக விளங்கும் IIFL நிறுவனம் தற்போது 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.
திடீர் வளர்ச்சி
மோடி ஆட்சியில் பல்வேறு திட்ட மாற்றங்கள் மூலம் இந்திய மக்கள் அதிகளவில் சேமிக்கும் சூழ்நிலை உருவாகியது. இதனால் கடந்த ஒரு வருடத்தில் இந்திய முதலீட்டுச் சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக இருந்தது.
இது ஐஐஎப்எல் நிறுவனத்திற்குச் சாதகமாக அமைந்தது.
வெற்றிக்கான காரணம்
இந்தியாவில் இருக்கும் முதல் தலைமுறை முதலீட்டாளர்கள் அதிகளவில் ஐஐஎப்எல் நிறுவனத்தில் முதலீடு செய்வதால் ஐஐஎப்எல் வெற்றி பெற்றுள்ளது எனப் பல ஆய்வுகள் கூறுகிறது.
இதற்கு நிர்மல் பதில் என்னவென்றால் முதல் தலைமுறையினர் என்பதை விடவும், இன்றைய இளைஞர்கள் (முதல் தலைமுறையினர்) மத்தியில் சொத்து அல்லது முதலீடு செய்வதற்கான ஆர்வம் அதிகமாக உள்ளது. இதற்கு ஐஐஎப்எல் சிறந்த தளமாக இயங்கியது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா
தற்போது உலகில் எந்தொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் 10 வருடத்திற்குப் பின்பு உலகில் இருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு இந்தியா தான் ஊழியர்களைச் சப்ளை செய்யும்.
1 பில்லியன் டாலர்
கடந்த ஒரு வருடத்தில் ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு இரட்டிப்பு வளர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் 1 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
காலாண்டு வளர்ச்சி
இந்நிறுவனம் டிசம்பர் காலாண்டு லாபம் மட்டும் சுமார் 32 சதவீதம் வரையில் உயர்ந்து சுமார் 36.3 மில்லியன் டாலராக அதாவது 236 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
23 சதவீத பங்குகள்
நிர்மல் ஜெயின் தற்போது ஐஐஎப்எல் நிறுவனத்தில் சுமார் 23 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதனுடன் இவரும், இவரின் மனைவியும் இணைந்து 5பைசா கேபிட்டல் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
10,000 HNI's
ஐஐஎப்எல் நிறுவனம் தற்போது சுமார் 10,000 அல்ட்ரா ஹைய் நெட் வொர்த் இன்டிஜ்வெல்ஸ் மக்களின் சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது. இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் ஆகும்.
அல்ட்ரா ஹைய் நெட் வொர்த் இன்டிஜ்வெல்ஸ்
இந்தியாவின் அனைத்து முன்னணி முதலீட்டு மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களுக்குத் தற்போது முக்கியமான குறி என்றால் அல்ட்ரா ஹைய் நெட் வொர்த் இன்டிஜ்வெல்ஸ்.
அச்சே தின்
‘பனியா'காரர்கள்..!
இந்திய பணக்காரர்களில் நான்கில் ஒரு பங்கு மார்வாடிகளாம்..!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications