இந்திய வங்கிகள் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக வரும் தகவல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி 8 வகையாக மோசடிகளைப் பிரித்துள்ளது. அதில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி இவை இரண்டின் கீழ் மட்டும் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
இழப்பு
வங்கிகள் ஏமாற்றுதல் மற்றும் மோசடி என மட்டும் 2014-2015, 2015-2016, 2016-2017 நிதி ஆண்டில் 42,276 கோடி ரூபாயினை இழந்துள்ளன.
வங்கிகள்
வங்கிகள் இழந்த 42,276 கோடி ரூபாயில் பொதுத் துறை வங்கிகள் 89 சதவீதம் என 37,583 கோடி ரூபாய் வரை இழந்துள்ளன. தனியார் துறை வங்கிகள் 4,683 கோடி ரூபாய் வரை இழப்புகளைச் சந்தித்துள்ளன.
எஸ்பிஐ வங்கி
பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் அதிகபட்சமாக 5,743 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளது. இது பொதுத் துறை வங்கிகள் இழந்த தொகையில் 15 சதவீதம் ஆகும்.
புகார்கள்
பணம் மோசடி நடைபெற்றுள்ளதாக மூன்று வருடத்தில் 7,505 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் 4,702 பொதுத் துறை வங்கிகளில் இருந்து 2,803 தனியார் துறை வங்கிகளில் இருந்தும் என்று தரவுகள் கூறுகின்றன.
மோசடிகள்
மோசடிகள் முக்கியமான போலி ஆவணங்கள் பெற்றுக்கொண்டு கடன் அளித்தது மற்றும் போலியாக ஏதேனும் காரணங்களைக் கொண்டு வங்கிகள் பணம் பெறுவது என்பது அன்மைகாலங்களில் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ரூ. 1 லட்சம்
ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்பில் நடைபெற்ற மோசடிகள் மட்டுமே இங்குக் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கிகளில் குறைந்த அளவில் பணம் மோசடிகள் நடைபெற்றதன் மூலமாகச் சில நூறு கோடிகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடி நடைபெற காரணங்கள்
வங்கிகளில் மோசடி நடைபெற முக்கியக் காரணங்களாக ஊழியர்களுக்குத் தேவையான அளவில் பயிற்சி அளிக்காதது மற்றும் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பு இல்லாதோ காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications