தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா?

Written By:
Subscribe to GoodReturns Tamil

இந்தியா - இலங்கை - பங்களாதேஷ் இடையிலான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி இந்தியா- பங்களாதேஷ் மத்தியில் கொழும்பு நகரில் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்தப் போட்டிக்குப் பின் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் இந்தியா முழுவதும் டிரென்ட் ஆனது மட்டும் அல்லாமல் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாகி இருக்கிறார்.

இன்று பேஸ்புக், டிவிட்டர், செய்தி ஊடகம் என அனைத்திலும் தினேஷ் கார்த்திக் குறித்த செய்திகள் தான். இந்நிலையில் தினேஷ் கார்த்திக் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா..?

ஓரே நாளில் ஹீரோ

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் தினேஷ் கார்த்திக் மொத்தம் 8 பந்துகள் மட்டுமே சந்தித்தார். இதில் 3 சிக்ஸ் 2 பவுண்டரி அடித்து மொத்தம் 29 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி அடையச் செய்தார்.

அவரின் கிரிக்கெட் வரலாற்றில் நேற்றைய ஆட்டமே மிகச் சிறப்பான ஆட்டமாக அமைந்துள்ளது.

 

சம்பள உயர்வு

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான சம்பளத்தை அதிகளவில் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் பலரின் சம்பளம் இரட்டிப்பு ஆனாது மறந்திருக்க முடியாது. இந்தச் சம்பள உயர்வில் பயிற்சியாளர்களான சம்பளமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4 பிரிவு

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு 4 பிரிவுகளின் கீழ் சம்பளம் மாறுபடுகிறது. கிரேட் ஏ+, கிரேட் ஏ, கிரேட் பி, கிரேட் சி.

இதில் இன்றைய ஹீரோ தினேஷ் கார்த்திக் கிரேட் பி பிரிவில் உள்ளார்.

 

அடேங்கப்பா சம்பளம்

இப்பரிவில் இருக்கும் வீரர்களுக்குச் சம்பள உயர்வுக்கு முன் வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக இருந்தது, சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பின் 3 கோடி ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகத் தினேஷ் கார்த்திக் கிரேட் பி பிரிவில் இருக்கும் காரணத்தால் வருடத்திற்கு 3 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகிறார்.

 

மொத்த சொத்து மதிப்பு

இந்நிலையில் தினேஷ் கார்த்திக்-இன் மொத்த சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் என மதிப்பீட்டை செலிபிரிட்டிநெட்வொர்த் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகுதி உயர்வு

இந்தப் போட்டியில் தனது திறனை நிருப்பித்த தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பான விளையாடினால் அடுத்தச் சில வருடத்தில் இவர் கிரேட் ஏ பிரிவுக்கு மாற்றவும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

தீபிகா பல்லிகல்

தினேஷ் கார்த்திக்-இன் மனைவியா தீபிகா பல்லிகல் இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு வீரர். இத்துறையின் பெண் வீரர்கள் பட்டியலில் தீபிகா உலகின் டாப் 10 இடத்தில் 2012ஆம் ஆண்டில் இருந்தார். ஆனால் இப்போது 19வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

இந்திய கிரிகெட் அணியில் இருக்கும் பிற வீரர்களின் முழுச் சம்பளப் பட்டியல்.

 

கிரேட் ஏ+

இந்திய ஆண்கள் கிரிகெட் அணியின் கிரேட் ஏ+ வீரர்களுக்குத் தற்போது வருடத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.

இப்பிரிவில் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜாஸ்பிரிட் பூம்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் உள்ளனர்.

 

கிரேட் ஏ

கிரேட் ஏ+ வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.

இப்பிரிவில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், சடேஷ்வர் புஜாரா, ரஹானே, எம்.எஸ் தோனி, சாஹா ஆகியோர் உள்ளனர்.

 

கிரேட் பி

கிரேட் பி வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.

கே.எல். ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஹார்டிக் பாண்டியா, இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் கிரேட் பிரிவில் உள்ளனர்.

 

கிரேட் சி

கிரேட் சி வீரர்களுக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது.

கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஆக்ஸார் படேல், கருன் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் பட்டேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் இப்பிரிவில் உள்ளனர்.

 

 

ஐடி ஊழியர்கள்

இந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைப்பது இவர்களுக்கு தான்.. ஐடி ஊழியர்கள் இல்லை..!

 

 

எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்..!

ரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா.. எல்லாத்துக்கும் காரணம் இவங்கதான்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Dinesh karthik will get pay and grade raise?

Dinesh karthik will get pay and grade raise? - Tamil Goodreturns | தினேஷ் கார்த்திக் சம்பளம் 3 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்வா? - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns