இந்திய பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் 159 வெளிநாட்டுக் கிளைகளை வைத்துள்ளதாகவும் அதில் 41 கிளைகள் 2016-2017 நிதி ஆண்டில் நட்டம் அளித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கான நிதி அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
அன்மையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி செய்த மோசடியில் பல கோடி ரூபாயினைப் பொதுத் துறை வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகள் ஏமார்ந்துள்ளது. அந்தப் பணத்திற்குப் பஞ்சாப் நேஷ்னல் வங்கி தான் முழுமையான பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ-க்கு 52 வெளிநாட்டுக் கிளைகள் உள்ளது. அதில் அதிகபட்சமாக 9 வங்கிகள் நட்டத்தினை அளித்து வருகின்றன.
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆப் இந்தியாவிற்கு வெளிநாடுகளில் 29 வங்கி கிளைகள் உள்ளன. அதில் 8 நட்டத்தினை அளித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
பாங்க் ஆ பரோடா
பாங்க் ஆ பரோடா வங்கிக்கு 50 வெளிநாட்டு வங்கி கிளைகள் உள்ளன. அதில் 7 நட்டம் அளிக்கும் கிளைகள் ஆகும்.
பிற முக்கிய வங்கிகள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 5, கனரா வங்கியில் 4, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் யூனியன் வங்கி 2, ஐடிபிஐ, இந்திய வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் யூகோ வங்கிகளில் 1 என வெளிநாட்டு வங்கி கிளைகள் நட்டம் அளித்து வருகின்றன.
பொதுத் துறை வங்கி
பொதுத் துறை வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளை ஒன்றிணைத்து நட்டம் அளிக்கும் கிளைகளைக் குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் வெளிநாட்டுக் கிளைகள், துணை நிறுவனங்கள், பிரதிநிதி அலுவலகங்கள் மற்றும் பணப்புழக்க மையங்கள் என 35 செயல்பாடுகளையும் மூட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications