மோடியை வீழ்த்த யாருமில்லை.. 2029 வரை அசைக்க முடியாது..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

மோடி அரசு எதிராகத் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஒன்றுக்கூடி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது, மோடி ஆட்சி தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கும் இந்த நேரத்தில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவன முக்கியமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டின் தற்போது அதிபர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் அதிபர்களாகவும், பிரதமராகவும் இருப்பார்கள் என்று பட்டியலிட்டுள்ளது.

ஆதிக்கம்

உலக நாடுகளில் ஒரு நாட்டின் ஆதிக்கத்தைப் பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ அதிகாரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதன் படி அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா 2வது இடத்திலும் உள்ளது.

நீண்ட கால அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியை, காலநிலை மாற்றம், வறுமை மற்றும் பிற நாடுகளுடனான நட்புறவை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டுத் தலைவர்கள் பதிவி நிலைத்திருக்கும் கால அளவீட்டின் கணிப்பையே ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

 

முகமத் பின் சல்மான்

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமத் பின் சல்மான் இந்நாட்டின் தேவையற்ற மரபுகளை நீக்கிவிட்டு அடுத்தத் தலைமுறைக்கான நாட்டை உருவாக்கும் பணியில் மூழ்கியுள்ளார். இவரது பல முடிவுகளுக்கு அந்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இவரது தந்தைக்குத் தற்போது 82 வயது, முந்தைய அரசர் அப்துல்லா இறக்கும் போது அவருக்கு 90 வயது.

இந்நிலையில் தற்போது 32 வயதாகும் முகமத் பின் சல்மான் இன்னும் 50 வருடங்களுக்கு இங்கு ஆட்சி செய்வார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

 

கிம் ஜாங் உன்

வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் அமெரிக்கா மற்றும் தென் கொரியா உடன் தொடர்ந்து போர் உருவாக்கும் வகையிலேயே பேசி வருகிறார். இவரது தந்தை கிம் ஜாங் 2 இறக்கும் போது 70வயது.

இந்நிலையில் 30களில் இருக்கும் கிம் ஜாங் உன் குறைந்தபட்சம் 40 வருடம் வரையில் ஆட்சி செய்வார் எனத் தெரிகிறது.

 

ஜி ஜிங்பிங்

சீன அதிபரின் பதவி காலத்தை ஆதிக்கம் நிறைந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரியில் மாற்றியுள்ள நிலையில், 64வயதாகும் ஜி ஜிங்பிங் குறைந்த பட்சம் 2023 வரையில் அதிபராக நீடிப்பார் எனத் தெரிகிறது.

விளாடிமிர் புதின்

18 வருடமாக ரஷ்யாவை ஆட்சி செய்து வரும் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபர் தேர்தலில் 77 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனால் அடுத்த 6 வருடத்திற்கு அதாவது 2024 வரையில் புதின் அதிபராக இருப்பார்.

ரெசெப் தயிப் எர்டோகன்

துருக்கி நாட்டில் நவம்பர் 2019இல் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. உலகளவிலும், துருக்கி அரசு அமைப்பிலும் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் தற்போதைய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

நரேந்திர மோடி

ஏற்கனவே சொன்னது போல் மோடி ஆட்சி தொடருமான என்ற நிலையில் இருக்கும் போது ப்ளூம்பெர்க் வெளியிட்ட ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019இல் நடக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்றுவார்.

இதுமட்டும் அல்லாமல் மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவில் 2024ஆம் ஆண்டு வரையில் தொடரும் எனவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

அலி காமெனி

ஈரான் நாட்டின் அதிபராக இருக்கும் அலி காமெனி அவர்களுக்குத் தற்போது 78வயதாகும் நிலையில் அவர் இறக்கும் வரையில் அதாவது அதிகப்படியாக 2027 வரையில் இந்நாட்டின் அதிபராக இருப்பார்.

இம்மானுவல் மேக்ரோன்

பிரான்ஸ் அதிபரான இம்மானுவல் மேக்ரோன் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் 24 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள நிலையில் 2022 வரை அதாவது 5 வருட ஆட்சியில் இருப்பார். அவருக்கு இந்நாட்டு மக்கள் மத்தியில் அதிகளவிலான ஆதாரவு இருக்கும் நிலையில் அடுத்த தேர்தலிலும் இவர் வெற்றிப் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.  இதன் மூலம் இவர் 2027 வரையில் பதவியில் நீடிப்பார் எனத் தெரிகிறது.

நிக்கோலா மடுரோ

பல்வேறு நிதி பிரச்சனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வெனிசுலா நாட்டின் நிக்கோலா மடுரோ எதிர் கட்சிகளை முட்டித்தள்ளி தற்போது ஆதிக்க நிலையில் உள்ளார்.

இந்நிலையில் இவர் 2024ஆம் ஆண்டு வரையில் அதிபராக நீட்டிப்பார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

 

டிரம்ப்

அமெரிக்காவின் அதிபரான டொனால்டு டிரம்ப் 2020ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்றால், 2024ஆம் ஆண்டு வரையில் அதிபராக நீடிப்பார் என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பாவம் தான்

மோடியின் சம்பளம் இவ்வளவு தானா.. கொஞ்சம் பாவம் தான்

மக்களே உஷார்..!

எல்லாம் திட்டமிட்ட செயல்.. மிகப்பெரிய அறிவிப்பு வரப்போகிறது.. மக்களே உஷார்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi may rule till 2029, Shocking report

Modi may rule till 2029, Shoking report
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns