உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமாக இருக்கும் பேஸ்புக் 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று UK சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அதிகளவில் கிடைக்க வழிவகைச் செய்துள்ளது பேஸ்புக்.
வழக்கு
இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்ததுள்ள மட்டும் அல்லாமல் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பேஸ்புக் நிர்வாகம் மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளது.
மோசம் செய்தார் மார்க்..
சமுக வலைத்தளத்தில் அதன் பயனர்கள் கொடுக்கும் விபரங்கள் அனைத்தும் அவர்களின் விருப்பத்தின் பெயரிலேயே பதிவேற்றம் செய்யப்பட்டாலும், இதனை வெளி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப் பேஸ்புக் நிறுவனத்திற்கு எந்த உரிமையும் இல்லை. அதேபோல் பயனர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டியதும் பேஸ்புக் கடமை.
இது மிகப்பெரிய மோசடியாகவே பார்க்கப்படுகிறது.
5 கோடி வாடிக்கையாளர்கள்
பேஸ்புக் நிறுவனத்தில் இருக்கும் 5 கோடி மக்களின் தரவுகள் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக டொனால்டு டிரம்ப் அவர்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா
2014ஆம் ஆண்டு 3ஆம் தரப்பு நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட பேஸ்புக் பயனர்களின் தரவுகள் அனைத்தும் ஆய்வு செய்தோம், அவை அரசியல் தொடர்பான தகவல்கள் இல்லை என்பதால் அதனை முழுமையாக டெலிட் செய்துவிட்டோம் எனக் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
பேஸ்புக் நிறுவனத்தின் இந்த மோசடி மூலம், இந்நிறுவனத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது கடுப்பாகி உள்ளனர்.
சரிவு
இந்தச் செய்தி காட்டுத்தீ போல் பரவிய காரணத்தால் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பேஸ்புக் நிறுவனப் பங்கு திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்தது.
40 பில்லியன் டாலர்
இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் திங்கட்கிழமை மட்டும் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிலான சரிவு ஏற்பட்டது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இதோடு பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கபெர்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 6 பில்லியன் டாலர் வரையில் சரிந்தது.
கவர்ச்சி புயல்..!
243 மடங்கு அதிக சம்பளம்..!


Click it and Unblock the Notifications