பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவில் புதிய முயற்சி.. அமேசான் கலக்கல்..!
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பியூட்டி மற்றும் காஸ்மெடிக்ஸ் பிரிவுக்கு அதிகமான வர்த்தத வாயிப்புகள் இருக்கும் காரணத்தாலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் இப்பிரிவில் ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக அமேசான் இந்தியா தற்போது ஆடம்பர ஆயுர்வேத பிராண்ட் நிறுவனமான காம ஆயுர்வேத உடன் கூட்டணி வைத்துள்ளது. இதன் மூலம் காம ஆயுர்வேத நிறுவனத்தின் ஸ்கின் கேர் பொருட்கள் விற்பனை செய்ய உள்ளது.
மேலும் இப்பிரிவில் புதிதாக 30 பிறாண்டுகளைச் சேர்க்க அமேசான் திட்டமிட்டள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் அமேசான் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்குப் போட்டியாகப் பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது வால்மார்ட் உடன் கூட்டணி சேர முயற்சி செய்ய வருகிறது.


Click it and Unblock the Notifications