நாம் அனைவரும் விரும்பும் மால் மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் பிடிக்காத ஒன்று என்றால் பார்க்கிங் கட்டணம் தான். இங்கு வசூலிக்கப்படும் அதிகப்படியான பார்கிங் கட்டணங்கள் குறித்து மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்விதமான சாதக அறிவிப்புகளும் இதுவரை கிடைக்கவில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதே கதை தான்.
பார்க்கிங் கட்டண அராஜகத்திற்கு முதல் அடியாகத் தெலுங்கான மாநிலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலவசம்
தெலுங்கானாவில் ஹைதரபாத் உட்பட மாநிலத்தில் இருக்கும் அனைத்து மால், மல்டிப்ளெக்ஸ்களில் ஏப்ரல் 1 முதல் மக்கள் பார்கிங் செய்யப்படும் வாகனங்களுக்கு முதல் 30 நிமிடத்திற்குக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என இம்மாநில அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒரு மணிநேரம்
அதுமட்டும் அல்லாமல் அரசு உத்தரவில், வாகனத்தைப் பார்க்க செய்த நபர் இங்கு ஏதேனும் பொருட்களை வாங்கியிருந்தால் அதற்கான பில்களைக் காட்டினால் ஒரு மணிநேரம் வரையில் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என அறிவித்துள்ளது.
சினிமா
அதேபோல் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாகப் பார்க்க செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அதாவது ஒரு சினிமா பார்த்துவிட்டு வரும் நேரம் என வைத்துக்கொள்ளுங்கள்.
இந்தச் சூழ்நிலையில் பார்கிங் கட்டணத்தை விடவும் சினிமாக்கான டிக்கெட் விலை அல்லது நீங்கள் வாங்கிப் பொருட்களின் விலை அதிகமாக இருந்தால் பார்கிங் கட்டணம் செலுத்த வேண்டாம் தேவையில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது தெலுங்கானா மாநில அரசு.
அரசு ஆணை
இந்த அறிவிப்புக்கான அரசு ஆணையை அரவிந்த் குமார் ஐஏஎஸ் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் இதேபோன்ற நிலை தான் உள்ளது, தமிழக அரசு தெலுங்கானா மாநிலம் அறிவித்தை விடவும் சிறப்பான கட்டணம் எல்லாம் தேவையில்லை. இதையே அறிவித்தால் கூட போதுமானது.
தமிழ்நாட்டு அரசு இதை அறிவிக்குமா..?
ஆரம்பமே அமர்க்களம்..!
மோடி
எச்-1பி விசா


Click it and Unblock the Notifications