இந்திய பங்கு சந்தை புதன்கிழமை காலை பிளாட்டாகவே துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலை 9:53 மணி நிலவரத்தின் படி மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 236.33 புள்ளிகள் என 0.72 சதவீதம் உயர்ந்து 33,229.11 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 71.30 புள்ளிகள் என 0.72 சதவீதம் உயர்ந்து 10,197 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே இன்று எந்தப் பங்குகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்த விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
என்ஜிஎல் ஃபைன் - கெம்
என்ஜிஎல் ஃபைன் - கெம் நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என்று தெரிவித்துள்ள ஐசிஐசிஐ டைரக்ட் 405 ரூபாய்க்கு வாங்கினால் 465 ரூபாய் வரை உயரும் என்று தெரிவித்துள்ளது. கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்காகப் பார்மா வணிகத்தில் இந்த நிறுவனம் ஈட்டுப்பட்டு வருகிறது.
டாக்ட்டர் ரெட்டி லெபாரட்டிஸ்
டாக்ட்டர் ரெட்டி லெபாரட்டிஸ் நிறுவனமும் ஒரு பார்மா தொழில் செய்யும் நிறுவனமே ஆகும். சர்வதேச அளவில் வணிகம் செய்யும் இந்த நிறுவனத்தின் பங்குகளை 2,157 ரூபாய்க்கு வாங்கினால் 2,378 ரூபாய் வரை உயரும் என்று ஐஐசிஐ செக்யூரிட்டிஸ் பரிந்துரைத்துள்ளது.
கோடாக் மகேந்திரா வங்கி
தனியார் துறை வங்கி சேவை நிறுவனமான இந்த வங்கியின் பங்குகளை வாங்க ஜேபி மார்கன் பரிந்துரைத்துள்ளது. 1,045 ரூபாய்க்கு இந்தப் பங்குகளை வங்கினால் 1,200 ரூபாய் வரை இன்று உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
செண்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ்
முதலீட்டாளர்களுக்குப் பங்குகள், பிராசசிங் மற்றும் டெலிவரி, கணக்குத் திறப்பது, ரசீது அறிவுறுத்தல்கள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வரும் செண்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் நிறுவனப் பங்குகளை எச்டிஎப்சி செக்யூரிட்டிஸ் வங்க பரிந்துரைத்துள்ளது. 283 ரூபாய்க்கு இந்தப் பங்குகளை வாங்கினால் 425 ரூபாய் வரை உயரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பார்தி இன்ஃப்ராடெல்
டெலிகாம் கட்டுமான நிறுவனமான பார்தி இன்ஃப்ராடெல் தொலைத்தொடர்பு துறிஅ சார்ந்த டவர் சேவைகளை அளித்து வருகிறது. இந்தப் பங்குகள் தற்போது 334 ரூபாய் என்று உள்ள நிலையில் 300 ரூபாய் வரை ஹோல்டு செய்யலாம் என்றும் ஜெப்ரீஸ் பரிந்துரைத்துள்ளது.
பொருத்துத் துறப்பு
இங்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வல்லுநர்கள் கருத்தாகும். இதில் முதலீடு செய்வது சந்தை மற்றும் முதலீட்டாளரின் ரிஸ்க்கிற்கு உட்பட்டது. எந்த வகையிலும் இந்த இணையதளமும், ஆசிரியரும், நிர்வாகமும் இதனால் ஏற்படும் நட்டத்திற்கோ லாபத்திற்கும் பொறுப்பேற்காது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications