சோனி இந்தியாவின் புதிய தலைவர் சுனில் நாயர்..!
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சோனி, சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தின் காரணமாகத் தொடர் வர்த்தகத் தொய்வை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் சோனி இந்திய பிரிவின் தலைவராகச் சுனில் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பணி வருகிற ஏப்ரல் 1 முதல் துவங்க உள்ளதாகச் சோனி இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இவரது நியமனத்தின் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவிலான வளர்ச்சியை அடையும் எனவும் சோனி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு இப்பதவியில் கெனிசிரோ ஹிபி இருந்தார், தற்போது இவர் சோனி பிரேசில் வர்த்தகத்திற்கு நியமித்துள்ளது சோனி நிர்வாகம்.


Click it and Unblock the Notifications