ஹோம் லோன் வாங்குபவர்களுக்கு 100% செயலாக்க கட்டண சலுகை.. எஸ்பிஐ அதிரடி!
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு ஹோம் லோன் எனப்படும் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது 100 சதவீத செயலாக்க கட்டணம் சலுகையினைப் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் 'எங்கள் https://homeloans.sbi today இணையதளத்திற்கு வந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்து 100% செயலாக்கக் கட்டண தள்ளுபடியை பெறலாம் என்றும் 30 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 8.35 சதவீதம் வட்டி விகித லாபம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியில் கடன் பெற முக்கியமாக இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 70 ஆகும். எஸ்பிஐ வங்கில் அதிகபட்சம் 30 ஆண்டுகள் தவனை வரையில் வீட்டுக் கடன் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications