மத்திய அரசு இரண்டு வருடங்களாக இல்லாத அளவிற்கு உள்நாட்டு இயற்கை எரிவாயு மீதான விலையை வரும் வாரம் ஏற்ற இருக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகப் பிடிஐ வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி மத்திய அரசு இயற்கை எரிவாயு மீதான விலையை ஏற்றினால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனமும் அதிகப் பயன் படையும் என்பது தெரிய வந்துள்ளது.
எவ்வளவு உயர்வு
இயற்கை எரிவாயு 1 mmbtu (இயற்கை எரிவாயுவை கணக்கிட பயன்படுத்தும் குறியீடு) தற்போது 2.89 டாலர் என்று இருக்கும் நிலையில் 3.06 டாலராக மத்திய அரசு உயர்த்த இருக்கின்றது என்று தகவல்கள் கூறுகின்றன.
விலை உயரும் பொருட்கள்
மத்திய அரசு இந்த முடிவினை எடுப்பதினால் இயற்கை எரிவாயு விலை உயர்வு என்பது மட்டும் இல்லாமல் மின்சாரம் மற்றும் யூரியா உற்பத்தி விலையும் உயர வாய்ப்புகள் உள்ளது.
ஓஎன்ஜிசி
இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டால் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 2,300 கோடி ரூபாயில் இருந்து 4,000 கோடியாக உயரும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு 4.9 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் அளவு மட்டுமே எடுப்பதால் ஓஎன்ஜிசி அளவுக்கு இல்லை என்றாலும் லாபம் அதிகரிக்கும். அதே நேரம் எரிவாயு விலை உயர்வு உற்பத்தியாளர்களுக்கு அதிகம் லாபம் அளிக்கும் என்பதால் சிஎன்ஜி மற்றும் இயற்கை எரிவாயு பைப் லைன் சேவைகள் மூலமாக ரிலையன்ஸ் பெரும் பயனை அடையும்.
புதிய சூத்திரம்
புதிய எரிவாயு விலை சூத்திரத்தின் படி அமெரிக்கா, ரஷ்யா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் 6 மாதத்திற்கு ஒரு முறை இயற்கை எரிவாயு விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
முந்தைய விலை உயர்வு
இந்தியாவில் இதற்கு முன்பு 2.48 டாலராக இருந்த ஒரு mmbtu எரிவாயு விலையினை மூன்று வருடத்திற்குப் பிறகு 2017 அக்டோபர் - 2018 மார்ச் வரை 2.89 டாலராக மத்திய அரசு உயர்த்தி இருந்தது.
ஐடி ஊழியர்களின் அட்ராசிட்டி.
ஆஸ்திரேலியா 457 விசா
அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி..
வேலைவாய்ப்புகளை இழக்கும் அமெரிக்கா..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications