அமெரிக்க வர்த்தகச் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காகவும், டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு சீன இறக்குமதி பொருட்களைக் குறிவைத்து அதிகளவிலான இறக்குமதி வரியை விதித்தது இருநாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போருக்கு வித்திட்டது.
இதைத் தொடர்ந்து சீன அரசும், அமெரிக்காவில் இருந்து அதிகளவில் சீனாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறிவைத்து அதிகளவிலான வரியை விதித்து அதிகாரப்பூர்வமாகப் போரை துவங்கி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குற்றச்சாட்டு
இந்நிலையில் இரு நாடுகளுக்கு மத்தியிலான இந்த வர்த்தகப் போர் பிரச்சனையின் முக்கியக் காரணம் அமெரிக்காவின் அறிவுசார்ந்த சொத்துக்களைச் சீனா முறையற்ற வகையில் பயன்படுத்தி உற்பத்தியில் ஈடுபடுகிறது.
இதன் வாயிலாக அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கிறது என்பதே அமெரிக்காவின் மிக முக்கியக் குற்றச்சாட்டு
வரி விதிப்புகள்
இதனைத் தடுக்கவே அமெரிக்கா முன்னதாக வரியை விதித்தது. இதன் பின்பு அமெரிக்காவைத் திருப்பி அடிப்பதற்காகச் சீனா தற்போது அமெரிக்கா உடனான அனைத்து வர்த்தகத்திலும் வரி மற்றும் நெருக்கடியை விதித்து வருகிறது.
வேலைவாய்ப்பில் பெரும் வீழ்ச்சி
இந்த வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் மூலம் சீனாவில் 20 லட்சத்திற்கும் அதிமாகவும், அமெரிக்காவில் 20 லட்சம் என்ற நிலைக்குச் சற்று குறைவான எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என அமெரிக்க அரசின் உயர் நிர்வாக அதிகாரி தெரிவித்தள்ளார்.
சீனா கையில் முடிவு
இந்நிலையில் வர்த்தகப் போர் பிரச்சனைக்கான தீர்வையும் இறுதி முடிவையும் சீனா தான் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகப் பற்றாக்குறை
சீனாவின் முறைகேடான உற்பத்தி பொருட்கள் மூலம் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை அளவு 370 பில்லியன் டாலராக உள்ளது எனச் சந்தை ஆய்வுகள் கூறுகிறது.
2001 முதல்
உலக வர்த்தக அமைப்பில் சீனா கடந்த 2001ஆம் ஆண்டு இணைந்தது, இந்த இடைப்பட்ட காலத்தில் சீன பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலரில் இருந்து 12 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இது கிட்டத்தட்ட 800 சதவீத வளர்ச்சி.
அமெரிக்கா
அமெரிக்காவின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி 1947 முதல் 2000ஆம் ஆண்டுக் காலத்தில் வருடாந்திர சராசரி அளவு 3.5 சதவீதமாக உள்ளது. இதற்குப் பின்னான காலத்தில் 2 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
இந்தச் சரிவிற்கு முக்கியக் காரணம் அமெரிக்காவின் முறையற்ற அறிவுசார்ந்த சொத்துக்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்து அதனைச் சந்தைப்படுத்துவது தான் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications