இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளை வாங்க ஏற்ற 6 எக்ஸ்சேஞ்சுகள்..!

பிட்காயின் வாங்குவதால் ஏற்படும் ரிஸ்க் குறித்து மத்திய அரசு, ஆர்பிஐ உள்ளிட்டவர்கள் என்ன தான் எச்சரிக்கை விடுத்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு அதன் மீதான ஆர்வம் இன்னும் குறையவில்லை என்று கூறலாம்.

உலகின் தலை சிறந்த முதலீட்டாளரான வாரன் பஃப்பெட் 2014-ம் ஆண்டுப் பிட்காயின் ஒரு கானல் நீர் என்று கூறினார். ஆனால் அந்தச் சிவப்புக் கோட்டை எல்லாம் தாண்டியும் அதிகளவில் முதலீடுகள் நடைபெற்று வந்துகொண்டு தான் இருக்கிறது.

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

2017-ம் ஆண்டுப் பிட்காயின், ரிப்பல், எதீரியம் மற்றும் பிற காயின்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. மேலும் பிட்காயினை எந்த நாட்டில் இருந்தும் வாங்கி எங்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம் என்பதால் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பினையும் பெற்றது.

இந்தியாவில் பிட்காயின் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் எங்கு எல்லாம் கிரிப்டோகரன்சிகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

 

காயிநெக்ஸ் (Koinex)

காயிநெக்ஸ் (Koinex)

காயிநெக்ஸ்-ல் கணக்கைத் திறக்க பான் எண் கட்டாயம் ஆகும். தற்போது காயிநெக்ஸ் எத்திரியம், பிட்காயின், லைட்காயின், ரிப்பல், பிட்காயின் கேஷ், ஓமிஸேகோ, ரெக்வஸ்ட், ஆக்ஸ் பிரோடொகால், கோலெம், பேசிக் அடென்ஷன் டோக்கன், நியோ, கேஸ், அடெனிட்டி, டிரான், ஸ்டெல்லார், லூமென்ஸ், ஏஐஓஎன், நியூக்லியஸ் விஷன், நேனோ மற்றும் ஈஒஎஸ் கிர்ப்டோ கரன்சிகளின் எக்ஸ்சேஞ்ச் சேவைகளை வழங்குகிறது.

பினான்ஸ்

பினான்ஸ்

பினான்ஸ் எக்ஸ்சேஞ்ச் உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கிரிப்டோகரன்ஸி சேவையினை வழங்கி வருகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் மூலமாகக் கிரிப்டோகரன்ஸிகள் வாங்க அடையாள ஆவணங்களை அளிக்க வெண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை.

ஜெப்பே

ஜெப்பே

மும்பாயினைத் தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெப்பே 2015-ம் ஆண்டுக் கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்ச் செய்யும் நிறுவனமாகத் துவங்கப்பட்டது. ஜேப்பே செயலியிலை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு பயனர்கள் கிரிப்டோ கரன்சிகளை வாங்க மற்றும் விற்க முடியும். ஜேப்பே செயலியினை ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலமாக 3,000,000 நபர்கள் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

யூனோகாயின்

யூனோகாயின்

பெங்களூரு அருகில் உள்ள தும்கூரில் துவங்கப்பட்ட யூனோகாயின் நிறுவனம் தற்போது பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தச் செயலியினைப் பயன்படுத்திப் பிட்காயினை வாங்கலாம், விற்கலாம், பிறருக்கு அனுப்பலாம் எனப் பல வயகையாகக் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளைச் செய்யலாம். பிட்காயின், ஏதெர், ரிப்பல், பிட்காயின் கேஷ், லைட் காயின் மற்றும் பிட்காயினைக் கோல்டு போன்ற கிரிப்டோகரன்சிகள் சேவையினை யூனோகாயின் வழங்குகிறது.

 பிட்எக்ஸோஎக்ஸோ

பிட்எக்ஸோஎக்ஸோ

உலகின் முதல் பிரீபெய்டு பிட்காயின் பிப்ட் கார்டு சேவையினை அறிமுகம் செய்த பெருமை பிட்எக்ஸோஎக்ஸோ-க்கு உள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் பிட்காயின் வாங்க அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

காயின்மாமா

காயின்மாமா

அடையாள ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்காமல் காயின்மாமா எக்ஸ்சேஞ்ச் மூலமாகப் பிட்காயின் மற்றும் எத்திரியம் காயின்களை வாங்கலாம். 2013-ம் ஆண்டு முதல் காயின்மாமா கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்ச் சேவையினை வழங்கி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+