ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த 1 பில்லியன் டாலர் அதிரடி திட்டம்..!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது டெலிகாம் வணிகத்தில் அடுத்தக் கட்டமாக ஜியோ மியூசிக் சேவையினைச் சாவன் மியூச்க் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவின் அடுத்த 1 பில்லியன் டாலர் நிறுவனமாக இது உருவெடுக்கும்.

இந்த மியூசிக் இணைவு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மிகப் பெரிய நன்மை அளிக்கும். ரிலையன்ஸ் நிறுவனம் ஈரோஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வாங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

சாவனுடனான இந்தக் கூட்டணியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அவர்களின் மிகுந்த அனுபவமுள்ள நிர்வாகக் குழு ஜியோ-சவனை ஒரு விரிவான பயனர் தளத்திற்குக் கொண்டு செல்லும் கருவியாக இருக்கும், இதனால் இந்திய ஸ்ட்ரீமிங் சந்தையில் எங்கள் தலைமைத்துவ நிலை பலப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநரான ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மதிப்பு

மதிப்பு

இரண்டு நிறுவனமும் இணைவதன் மதிப்பு 1 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அதில் ஜியோமியூசிக் 670 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் புதிய நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யும், அதில் 20 மில்லியன் டாலர் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு மட்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆப் ஸ்டோர்களில் தலைசிறந்த மியூசிக் செயலியாக இது உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சாவன் மியூசிக்

சாவன் மியூசிக்

சாவன் மியூசிக் நிறுவனத்தினை உருவாக்கிய ரிஷி மல்ஹோத்ரா, பரம்தீப் சிங் மற்றும் வினோத் பாட் ஆகியோர் தங்கள் தலைமைப் பணிகளை எப்போதும் போலவே தொடர்ந்து வளர்ச்சிக்கு உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

பங்குதார்கள்

பங்குதார்கள்

சாவன் மியூசிக் நிறுவனத்தின் பங்குதார்களிடம் இருந்து 104 மில்லியன் டாலர் பங்குகளை ஜியோ மியூசிக் வாங்கும். சாவன் நிறுவனத்தில் டைகஎ குலோபல் மேனேஜ்மெண்ட், லிபர்டி மீடியா மற்றும் பெர்டெல்ஸ்மன் போன்றோர் பங்குதார்களாக உள்ளனர்.

புரட்சி

புரட்சி

ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் சாவன நிறுவனத்திற்குக் கூடுதலாக 100 மில்லியன் பயனர்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் போது டிஜிட்டல் இசை சேவைகளில் மிகப் பெரிய புரட்சி வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி ஊழியர்களின் அட்ராசிட்டி

ஐடி ஊழியர்களின் அட்ராசிட்டி

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி

அமெரிக்காவிற்கு சீனா கொடுத்த நெத்தியடி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+