பிஎம் ஆவாஸ் யூஜானா திட்டத்தின் கீழ் எவ்வளவு வீடுகள் கட்டப்பட்டுள்ளது.. அரசு அதிரடி அறிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் எட்டுச் சதவீதம் மட்டுமே இலக்கு எட்டப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என்றும் 8 சதவீதம் என்ற இலக்குக் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் பற்றிய தகவலின் அடிப்படையில், பெறப்பட்டது என்று பிஐபி மூலமாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள முழுமையான அறிக்கையினை இங்குப் பார்க்கலாம்.

கட்டி முடிக்கப்பட்ட வீடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

கட்டி முடிக்கப்பட்ட வீடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் முன்னேற்றம் கீழ்க்காணும் தகவலின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். 40.65 லட்சம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதில், இதுவரை 18.47 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 3.5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மேலும் 2014, மார்ச் முடியக் கட்டிமுடிக்கப்படாமல் இருந்த வீடுகள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுகட்டமைப்புத் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்டு, 1.7 லட்சம் வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இதையும் சேர்த்து, கட்டி முடிக்கப்பட்ட மொத்த வீடுகளின் எண்ணிக்கை 5.2 லட்சம் ஆகும்.
மேலும், கடந்த ஓராண்டில் அரசு அனுமதித்த வீடுகளின் எண்ணிக்கை, 21.65 லட்சம் ஆகும். வீட்டு வசதித் திட்டங்கள் பொதுவாக முடிவடைவதற்கு 18 முதல் 24 மாதங்கள் ஆகும்.

தொடரும் பணிகள்

தொடரும் பணிகள்

எனவே, வீடுகள் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணியிலிருந்து கட்டுமானம் தொடங்குவதாகத்தான் பொருளாகும். எனவே, தரைமட்டத்திலிருந்து கட்டுமானப் பணியில் முன்னேற்றம் மதிப்பிடப்பட வேண்டும். கட்டுமானத்திற்காக அடித்தளம் அமைக்கும் பணியில் 55 சதவீதம் நிலம் தோண்டும் பணியுடன் உள்ளது. 12 சதவீதம் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றவை பல்வேறு கட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்திட்டம் தொடங்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டு, திட்டத்தின் பங்குதாரர்கள் சேர்க்கப்பட்டு, 2017-ஆம் ஆண்டு, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்தத் திட்டத்தின் சரியான வேகம் மதிப்பிடப்பட வேண்டும்.

தேவை
 

தேவை

கட்டுபடியாகக்கூடிய விலையில் வீடுகளைப் பெறுவதற்கு ஏற்ப, சுற்றுச் சூழல் அனுமதி முறைகள் அவசியமாகும். (இதில் பிஎம்ஏஒய்(யு) முக்கியத்துவம் வாய்ந்ததாகும்). கட்டுமான நிலவரத்திற்கு அனுமதி, அந்நிய முதலீடு நடைமுறைகளை எளிதாக்குவது, பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சி மாதிரிகளை அறிமுகப்படுத்துவது, புதுமை வாய்ந்த நவீன கட்டுமான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது, வீடுகளின் பரப்பை வரி மானியம் பெறுவதற்கு ஏற்ற வகையில் அதிகரிப்பது, அதன் மூலம் பிஎம்ஏஒய்(யு) திட்டப் பணிகளை உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்குத் தேவையானவையாகும்.

ஜிஎஸ்டி குறைப்பு

ஜிஎஸ்டி குறைப்பு

கடனுதவியுடன் கூடிய மானியத் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியும் 12 சதவீதத்திலிருந்து எட்டுச் சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் 1 மற்றும் 2-ஆம் கட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதமர் ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் திட்டம் 2018 ஜனவரி 25-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

துரிதமாகச் செயல்படும் திட்டம்

துரிதமாகச் செயல்படும் திட்டம்

இந்த நடவடிக்கைகளுடன் பிரதமர் வீட்டுவசதித் திட்டம், சரியான திசையில் பயணிக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் வீடுகளுக்குமேல் ஒப்புதல் வழங்கப்படுகின்றன. முந்தைய திட்டங்களை ஒப்பிடுகையில், இது துரித கதியில் செயல்படுத்தப்படுகிறது.

அனுமதிகள்

அனுமதிகள்

ஏழாண்டு இயக்கப் பருவத்தின்போது, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மறுகட்டமைப்புத் திட்டத்தின்கீழ், 3 லட்சம் வீடுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், கடந்த 3 ஆண்டுகளுக்கும் குறைந்த காலகட்டத்தில், மும்மடங்கிற்கும் மேலாகப் பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன (40.65 லட்சம் வீடுகள்).

கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளின் விகிதம், பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், தோராயமாக மாதத்திற்கு 14,252 வீடுகளாகும். அதேசமயம் முந்தைய திட்டத்தின்கீழ், மாதத்திற்கு 8,333 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
முந்தைய வட்டிக் குறைப்புத் திட்டங்களின் மூலம் ரூ.22.50 கோடி, 18,166 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. புதிய பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், 5 மடங்கு பயனாளிகளுக்கு (91,694), 82 மடங்குக்குமேல் வட்டி மானியம் அளிக்கப்பட்டது (ரூ.1,859 கோடி).

 

ஒதுக்கப்பட்ட நிதி

ஒதுக்கப்பட்ட நிதி

இந்தத் திட்டத்தின்கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.13,582 கோடியை நிதியுதவியாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குத் தொடர்ந்து நிதி அளிக்கும் வகையிலும், பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தைத் துரித கதியில் படிப்படியாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான கூடுதல் பட்ஜெட் ஆதாரங்களை உயர்த்தும் வகையில், ரூ.60,000 கோடியில் தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியம் என்ற அமைப்பை நிறுவ கடந்த மாதம் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

21.97 LAKHS HOUSES GROUNDED & COMPLETED AGAINST 40.65 LAKH HOUSES SANCTIONED SINCE LAUNCH OF PMAY

21.97 LAKHS HOUSES GROUNDED & COMPLETED AGAINST 40.65 LAKH HOUSES SANCTIONED SINCE LAUNCH OF PMAY (URBAN)
Story first published: Sunday, March 25, 2018, 18:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X