ஏர்ஏசியா இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான அனைத்துக் கட்டணங்களும் உள்ளடக்கிய டிக்கெட்களை மெகா விற்பனை சலுகையின் கீழ் 849 ரூபாய் முதல் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, ராஞ்சி போன்ற முக்கியத் தடங்களில் பயணம் செய்ய ஏர்ஏசியா இந்திய டிக்கெட் விலையினைக் குறைத்து அறிவித்துள்ளது.
சலுகை காலம்
ஏர்ஏசியா இந்தியா வழங்கும் இந்த மெகா விற்பனை சலுகையின் கீழ் 2017 அக்டோபர் 1 முதல் 2019 மே 28-ம் தேதி வரையிலான விமானப் பயண டிக்கெட்களை 2018 ஏப்ரல் 1-ம் தேதி வரை புக் செய்யலாம்.
849 ரூபாய் டிக்கெட் சலுகை உள்ள வழித்தடங்கள்
புவனேஷ்வர் - ராஞ்சி செல்ல 849 ரூபாய் கட்டணம் என ஏர்ஏசியா இந்தியா அறிவித்துள்ளது. ஏர்ஏசியா இந்தியா இணையதளத்தின் மூலம் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை வங்கி பயணம் செய்யலாம்.
சென்னை மற்றும் பிற வழித்தடத்தில் உள்ள சலுகைகள்
பெங்களூரு - சென்னை செல்ல 879 ரூபாய் சலுகை விலை கட்டணமாகும். புவேன்ஷவர் - கொல்கத்தா செல்ல 869 ரூபாய் என்றும், கொச்சி-பெங்களூரு, இம்பால் - கவுகாத்தி, பெங்களூரு - கொச்சி செல்ல 879 ரூபாய் என்றும், புவனேஷ்வர்-பெங்களூரு செல்ல 1,499 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்றும் ஏர்ஏசியா அறிவித்துள்ளது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
ஏர்ஏசியா இந்தியாவின் மெகா ஆஃபரில் www.airasia.com இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். குறைந்த அளவிலான டிக்கெட் மட்டுமே சலுகையில் கிடைக்கும் என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
கோஏர்
கோஏர் நிறுவனம் மாணவர்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை மற்றும் 25 கிலோ வரை பயணச் சாமான்களை இலவசமாக எடுத்து செல்ல அனுமதி அளித்துள்ளது. இதற்கு மானவர்கள் ஐடி கார்டினை காண்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஐடி ஊழியர்களின் அட்ராசிட்டி..
ஜியோ


Click it and Unblock the Notifications