ஆப்பிள், கூகுள் எனச் சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் இந்திய சந்தையில் உள்ள தங்களது ஆர்வத்தினைக் காண்பிக்கத் தங்களது மனைவிகளுடன் இந்தியாவின் பிரபள இடங்களில் புகைப்படங்களை எடுத்து சமுக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.
தற்போது அதில் சிறிய மாற்றமாகப் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் உடன் படம் எடுத்துள்ளார் உபர் செயலி டாக்ஸி நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான தாரா கொஸ்ரோஷாஹி.
சிங்கப்பூர்
சென்ற மாதம் உபர் டாக்ஸி சேவை வழங்கி வரும் ஆசிய சந்தை நாடுகளைச் சுற்றி பார்க்க வந்த தாரா கொஸ்ரோஷாஹி சிங்கப்பூர் தலைமையகத்திற்குச் செல்வதைத் தவிர்த்ததன் மூலமாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தங்களது சேவையினைக் கிராப் நிறுவனத்திற்கு விற்பதனை செய்வதை உறுதி செய்தார். இதற்கான ஒப்பந்தம் குறித்துத் திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தென் கிழக்கு ஆசிய சந்தை
உபரின் சிங்கப்பூர், கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளின் செயல்பாடுகளைக் கிராப் நிறுவனத்திற்கு அளித்துள்ளனர். இதன் மூலமாக கிராப் நிறுவனத்தின் 27.5 சதவீத பங்குகளை உபர்-க்கு கிடைத்துள்ளது. இதனால் தாரா கொஸ்ரோஷாஹியும் உபர் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களில் ஒருவராகிறார்.
உபர், கிராப் நிறுவனங்கள் இடையிலான பேச்சு வார்த்தையில் 20 சதவீத பங்குகள் உப்பருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகமாகவே உபர் பெற்றுள்ளது.
சாப்ட் வங்கி
ஜப்பானின் சாப்ட் வங்கி கிராப் மற்றும் உபர் என இரண்டு நிறுவனங்கள் மீதும் நேரடியாக முதலீடு செய்துள்ளதால் இந்தப் பரிவர்த்தனைகளில் சாப்ட் வங்கிக்குத் தான் மிகப் பெரிய வெற்றி ஆகும்.
ஓலா
கிராப் போன்று இந்தியாவில் உபர் நிறுவனத்திற்கு மிகப் பெரிய தலைவலியாக உள்ள ஓலா நிறுவனத்திலும் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமாகச் சாப்ட் வங்கி உள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஓலா, உபர் இடையிலான போட்டியில் கடனில் கார் வாங்கி இந்த நிறுவனங்களின் கீழ் வாகனம் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கே சிக்கல் ஆகும். பல ஓலா, உபர் வாகன ஓட்டுநர்கள் கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டுள்ளது. இதற்காக ஓலா, உபர் வாகன ஓட்டுனர்கள் சென்ற வாரம் வேலை நிறுத்தத்தில் கூட ஈடுபட்டனர்.
உபர்
உபர் நிறுவனத்தின் கோட்டையாக உள்ள ஆஸ்திரேலியாவில் ஓலா தங்களது டாக்ஸி சேவையை துவங்கியுள்ள நிலையில் அதனை சாப்ட் வங்கி வங்கி வேண்டாம் என்று சொல்லாமல் வரவேற்றது. தொடர்ந்து இப்படி நடந்தால் உபர் நிறுவனத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் விரையில் ஐபிஓ-ல் பங்குகளை வெளியிட உபர் தயாராகி வருகிறது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications