விமான நிலையங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் டீ, காபி போன்றவை விலை அதிகமாக உள்ளது என்று பயணிகள் பல முறை புகார் அளித்து வந்த நிலையில் அந்தப் பட்டியலில் பா சிதம்பரமும் சேர்ந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காபி டே சென்று டீ ஆர்டர் செய்துள்ளார் முன்னால் நிதி அமைச்சர் பா சிதம்பரம். ஒரு கப் சுடு தண்ணீர் மற்றும் டீ பேகிற்கு 135 ரூபாய் என்று பில் அளித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இவர் வேண்டும் என்று திருப்பி அளித்து விட்டேன், தான் செய்தது சரி தானே? என்று டிவிட் போட்டுள்ளார்.
அடுத்த டிவிட்டில் காபி பற்றியும் "காபி 180 ரூபாய். நான் யார் வாங்குகிறார்கள் என்று கேட்டேன்? பலர் என்று பதில் வந்தது. இது எனக்குத் தெரியவில்லையே?" என்று தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் மற்று அரசியல் பிரமுகரான பா சிதிம்பரம் டிவிட் போட்டதோடு விட்டுவிடாமல் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வழி செய்தால் நல்லது தான். இவரது மனைவி நளினி சிதம்பரம் நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக மக்கள் தாக்கல் செய்த வழக்கை எதிர்த்து வழக்காடியவர் ஆவார்.


Click it and Unblock the Notifications