அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் 37 மாகாணங்களின் பிரதிநிதிகளும் திங்கட்கிழமை சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் 50 மில்லியன் பயனர்களின் விவரங்களை அவர்களது அனுமதி இல்லாமல் எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் தந்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா உதவியுடன் மேலும் பயனர்களின் விவரங்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.
இழப்பு
பேஸ்புக் நிறுவனம் மீது தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு குறித்து மிகப் பெரிய கேள்வி எழுந்து நிலையில் அந்த நிறுவனம் கடந்த 10 நாட்களில் மட்டும் 100 பில்லியன் டாலர் வரை பங்கு சந்தை மூலதனத்தினை இழந்துள்ளது.
முன்பு
இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனப் பங்குகள் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 6.5 சதவீதம் என 150 பில்லியன் டாலர் மதிப்பிலான மூலதன சரிவை சந்தித்தது.
ஒப்புதல்
பேஸ்புக் நிறுவனம் முதன் முறையாக மார்ச் 16ம் தேதி பயனர்களின் விவரங்களைக் கேம்பிர்டிஜ் அனலிட்டிகா உதவியுடன் அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்ட உடன் 70 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தினை இழந்தது.
உயரும் பங்குகளின் விலை
அதே நேரம் பேஸ்புக் நிறுவனம் திங்கட்கிழமை முதல் மீண்டும் முதலீடுகளைப் பெற்று வந்தாலும், பங்குகள் விலை குறைவாக உள்ளதால், இந்தத் தரவு மோசடி பெரிய சிக்கலை ஏற்படுத்தாது என்று நினைக்கும் முதலீட்டாளர்கள் தான் இதற்குக் காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகள் கேள்வி
பேஸ்புக் நிறுவனத்தின் தனியுரிமை நடைமுறைகள் குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கேள்வி கேட்டு மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு அழுத்தம் அளித்து வருகிறது.
அமெரிக்க நீதிமன்றம்
இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்ற குழு ஏப்ரல் 10-ம் தேதி தரவு தனியுறிமை குறித்து விவாதிக்க மார்க் ஜூக்கர்பெர்க், ஆல்பாபெட், டிவிட்டர் போன்ற நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க உள்ளது.
டெஸ்லா
மறுபக்கம் வாட்ஸ்ஆப் தலைமை செயல் அதிகாரி, டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் பேஸ்புக் தளத்தினை நீக்கியது மட்டும் இல்லாமல் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தினையும் நீக்கியுள்ளனர்.
விளம்பரங்கள்
மோஜில்லா, ஆட்டோ உதிரிபாக ரீடெய்லர் பெப் பாய்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்களும் பேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்வதனை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இந்தியா
இந்தியாவிலும் பாஜக கட்சி மட்டும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா உதவியைச் சென்ற தேர்தலின் போது நாடியதாகவும் செய்திகள் வெளியாகியது. ஆனால் இதனைப் பாஜக கட்சி தலைமை மறுத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications