பேடிஎம் வாடிக்கையாளராக இருப்போர்களுக்கு ஒரு புதிய செய்தி, பேடிஎம் தற்போது கட்டண வங்கி என்ற ஒரு அம்சத்தைத் தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ போன் செயலியில் பேடிஎம் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு டெபிட் கார்டை வழங்குகிறது இந்த நிறுவனம். அதாவது இந்தச் செயலியை பயன்படுத்தி ஒரு டெபிட் கார்டை வாங்கிக் கொள்ளலாம். பிம் யூபிஐ வசதியுடன் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி பேடிஎம் வாலேட் வைத்திருப்பவர்களுக்கு இல்லை. குறிப்பாகப் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு ( Paytm Payments Bank) உள்ளவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.
அம்சங்கள் :
பேடிஎம் கட்டண வங்கியால் கொடுக்கப்படும் டெபிட் கார்ட் ஒரு ரூபே அட்டை ஆகும். ரூபே என்பது , நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பீ.சி.ஐ.) துவங்கிய உள்நாட்டு அட்டை கட்டண திட்டமாகும். இது இந்தியாவின் ஆன்லைன் பயன்பாட்டில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும்.
இந்த அட்டையைக் கடைகள் மற்றும் ஏடிஎம்மில் பயன்படுத்திக் கொள்ளலாம். இரண்டு லட்சம் ரூபாய் வரை இதில் காப்பீடு உண்டு. உடனடி பணப் பரிவர்த்தனைக்கு இந்த அட்டையில் ஒரு க்யுஆர் (QR) குறியீடு உள்ளது
கட்டணம் :
இந்த அட்டையின் விநியோகம் மற்றும் சேவை கட்டணமாக ரூபாய் 100/- ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அட்டைத் தொலைந்து போனால், புதிய அட்டைக்காக, விநியோக கட்டணத்தையும் சேர்த்து , ரூபாய் 100/- வசூலிக்கப்படுகிறது
மாதாந்திர கட்டணம்
மெட்ரோ நகரங்களில் முதல் மூன்று மாதத்திற்கு ஏடிஎம் மாதாந்திர கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது. மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு முதல் 5 முறை இலவசமாக வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 20/- வசூலிக்கப்படுகிறது.
பேடிஎம் செயலியை டவுன்லோட் செய்யுங்கள்:
ஆண்ட்ராய்டு போன் உள்ளவர்கள் கூகிள் ப்ளே ஸ்டோரிலும், ஐபோன் உள்ளவர்கள் அப் ஸ்டோரிலும் சென்று பேடிஎம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பேடிஎம் கட்டண கணக்கைத் திறந்து கொள்ளுங்கள்:
பேடிஎம் செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள வங்கி (bank ) விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.
டெபிட் கார்டுக்காக விண்ணப்பியுங்கள் :
வங்கி பக்கத்தில் , வங்கி கணக்குச் சேவைகள் என்ற பகுதிக்கு சென்று டெபிட் மற்றும் ஏடிஎம் கார்ட் விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். இது பேடிஎம் வாலெட் இருப்புத் தொகைக்குக் கீழே இருக்கும்.
கார்டுக்காகக் கோரிக்கை :
"Request Card" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் பழைய கார்டை ப்ளாக் செய்துவிட்டு புதிய கார்டுக்கான கோரிக்கையை வைக்கலாம்.
முகவரி :
"add address" என்று குறிப்பிட்டுள்ள இடத்தில் கார்டை விநியோகம் செய்ய வேண்டிய இடத்தின் முகவரியை நிரப்புங்கள்.
விண்ணப்பம் மற்றும் விநியோக கட்டணம் :
"proceed to pay" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள். இதுவரை உங்களுக்கான கட்டணம் ரூபாய் 150 ஆகும்.


Click it and Unblock the Notifications