சர்வதேச நிறுவனங்களான மாஸ்டர் மற்றும் விசா கார்டு நிறுவனங்களின் இந்திய சந்தை மதிப்பு கடந்த சில மாதங்களாகச் சரிந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் முன்னால் ஆர்பிஐ கவர்னர் வழிகாட்டுதலின் கீழ் இந்திய தேசிய பரிவர்த்தனை கார்ப்ரேஷன் உருவாக்கிய யூபிஐ செயலி ஆகும்.
இந்தச் செயலியினைப் பயன்படுத்து ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்கு நொடியில் பணம் அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ
சென்ற மாதம் இந்தியாவில் டெபிட் மற்றும் கிரெட்ட் கார்டுகள் பயன்படுத்திச் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளில் பாதி மதிப்பினை யூபிஐ பெற்றுள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
யூபிஐ
மொபைல் செயலியை பயன்படுத்தி ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்கிற்கு எந்த இடைத்தரகர்களும் இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் முறையினை ஆர்பிஐ ஒழுங்கு முறைப் படுத்தி அறிமுகம் செய்தது. இந்தச் செயலி நேரடியாக வங்கிகளுக்கு இடையில் தொடர்பு கொண்டு பணத்தினைப் பரிமாற்றம் செய்யும்.
ரகுராம் ராஜன்
2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னால் ஆர்பிஐ கவர்னாராக இருந்து ரகுராம் ராஜன் அறிமுகம் செய்த யுபிஐ செயலியானது பணப் பரிவர்த்தனையினை 24 மணி நேரமும் செய்ய அனுமதிப்பது மட்டும் இல்லாமல் குறைந்த அளவில் மட்டுமே கட்டணத்தினை வசூலிக்கிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி ஜனவரி மாதம் அதிகபட்சமாக 1.11 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது, 2017 டிசம்பர் மாதம் 1.06 பில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதை விட 4.73 சதவீதம் உயர்ந்துள்ளது.
யூபிஐ பரிவர்த்தனைகள்
யூபிஐ பரிவர்த்தனைகள் மட்டும் என்று கணக்கு பார்த்தால் 2017 டிசம்பர் மாதம் 145.5 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட நிலையில் 2018 ஜனவரி மாதம் 151.7 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.
வாலெட் நிறுவனங்கள்
பேடிஎம், கூகுள் தேஜ், போன்பே மற்றும் பிம் செயலி போன்றவற்றின் வரவால் தான் யூபிஐ பரிவர்த்தனையின் அளவு உயர்ந்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனங்கள்
அமேசான், ஸ்விகி, ஓலா, பிக்பஜார் மற்றும் ஜேட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்களும் யூபிஐ மூலமாகப் பணம் பெறும் சேவையினைத் தங்களது செயலிகளில் அறிமுகம் செய்துள்ளனர்.
வாட்ஸ்ஆப்
இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது யூபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் யூபிஐ பரிவர்த்தனையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரெடிட் சூசி
இந்திய டிஜிட்டல் பரிவர்த்தனை துறையானது 200 பில்லியன் டாலர் மதிப்புடையதாகத் தற்போது உள்ளதாகவும் அது வரும் நாட்களில் உயர்ந்து 2023-ம் ஆண்டு 1 பில்லியன் டாலராக உருவெடுக்கும் என்றும் கிரெடிட் சூசி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications