ஆனந்த் மஹிந்திரா மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பேஸ்புக்கின் தகவல் திருட்டுக்கு பதிலடி..!

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தல் முதல் இந்தியாவில் பிஜேபி, காங்கிரஸ் உட்படப் பல்வேறு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா மற்றும் அதன் இந்திய கிளை நிறுவனமான ovelina business intelligence ஆகியவற்றுக்கு முறைகேடாக மக்களின் தகவல்களைக் கொடுத்துள்ளது.

இந்தத் தகவல் திருட்டுக் குறித்துப் பேஸ்புக் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பேஸ்புக் நிறுவனமே கேம்பிரிட்ஜ் அனலிடிகாவிற்கு மறைமுகமாக உதவி செய்துள்ளது என மக்கள் அதிகம் நம்பப்படும் இந்நிலையில் ஆனந்த மஹிந்திரா புதிய முடிவை எடுத்துள்ளார்.

 ஆனந்த் மஹிந்திரா

ஆனந்த் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் தான் ஆனந்த் மஹிந்திரா. நாட்டின் பிற முன்னணி நிறுவன தலைவர்களைக் காட்டிலும் ஆனந்த் மஹிந்திரா சமுக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.

ஆனந்த் மஹிந்திராவின் சில டீவிட்கள் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பேஸ்புக் பிரச்சனை

பேஸ்புக் பிரச்சனை

பேஸ்புக் நிறுவனத்தின் இந்தத் தகவல் திருட்டு குறித்து நாட்டின் பெரும் தலைவர்கள் பெரிய அளவில் பேசவில்லை என்றாலும் மக்கள் அதிகளவில் இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திராவிற்குப் பேஸ்புக் குறித்த விவாதங்கள் நெருடியது.

 

அதிரடி டிவீட்

அதிரடி டிவீட்

இந்த நெருடலில் காரணமாக ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் கணக்கில் அதிரடியாக ஒரு டிவிட்டை தட்டினார். இது தற்போது இந்திய இளைஞர்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

என்ன டிவீட்

இதுதான் சரியான நேரம், நமக்கென (இந்தியா மற்றும் இந்திய மக்களுக்காகவும்) தனியாக ஒரு சமுக வலைத்தள நிறுவனத்தை உருவாக்கிச் சிறப்பான முறையில் அதனை நிர்வாகம் செய்து ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும்.

இதைச் சார்ந்து ஏதேனும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளதா? இப்படியொரு திட்டத்தை இளம் தலைமுறையினர் கொண்டு இருந்தால் நான் உதவி செய்வது மட்டும் அல்லாமல் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

ஜஸ்பீரித் பின்தரா

இந்த டிவீட்டுக்கு பின் மஹிந்திரா குழுமத்தின் டிஜிட்டல் பிரிவின் உயர் துணை தலைவர் ஜஸ்பீரித் பின்தரா, டிவிட்டரில் ஆனந்த மஹிந்திராவை இணைத்து பிளாக்செயின் உடன் சோசியல் 3.0 கொண்ட சமுக வலைதளத்தை அமைத்தால் பாதுகாப்புடன், தகவல்கள் ரகசியமாகவும் வைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆனந்த்

ஆனந்த் மஹிந்திராவின் டிவீட்டுக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு அளித்துள்ள நிலையில் அதற்கு நன்றி தெவித்தது மட்டும் அல்லாமல், மக்களின் பதில்கள் மற்றும் திட்டங்களை சரியான முறையில் கொண்டு செல்ல அனைவரும் ஜஸ்பீரித் பின்தரா இணைத்து டிவீட் செய்யுங்கள் என தெரிவித்தார் ஆனந்த்.

திட்டங்களை ஜஸ்பீரித் ஆய்வு செய்து அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வார் என தெரிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

 

 பேஸ்புக் நிறுவனத்திற்கு செக்

பேஸ்புக் நிறுவனத்திற்கு செக்

ஆனந்த் மஹிந்திராவின் இத்திட்டம் நிறைவேறினால் பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். ஏற்கனவே பேஸ்புக்-இன் இந்த மோசடி வெளியானதில் பல இந்தியர்கள் பேஸ்புக்கை விட்டு வெளியேறிவிட்ட நிலை இந்திய சமுகவலைதளம் உருவாகினால் இந்தியர்கள் அனைவரும் பேஸ்புக்கை விட்டு வெளியேறுவார்கள்.

இது பேஸ்புக் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் தளத்தில் பெரிய அளவிலான ஆபத்தை உருவாக்கும்.

 

 ஆர்வம்

ஆர்வம்

ஆனந்த் மஹிந்திராவின் தொடர் டிவீட்கள் மூலம் இத்திட்டத்தில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை தெரிந்துக்கொள்ள முடிகிறது. இத்திட்டம் வெற்றிப்பெற்றால் இந்தியா சமுக வலைதளத்திலும் அடுத்தகட்டத்திற்கு செல்லும்.

கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து

இதேபோன்ற கருத்தை தான் 2017 ஜனவரியில் கபிலன் வைரமுத்து தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களின் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு பின் இந்த கருத்தை வெளிட்டார்.

இவை உங்கள் பார்வைக்கு

 

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

பல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத் தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி Facebook - Twitter போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன.

 இரு கண்கள்.

இரு கண்கள்.

அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம்.

சீனா உதாரணம்

சீனா உதாரணம்

அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் 'sino weibo' என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம்.

தமிழ் இளைஞர்கள்

தமிழ் இளைஞர்கள்

மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழு அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

என்று தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார் கபிலன்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+