2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு தோல்விதான்.. 77% மக்கள் ஏகோபித்த பதில்..!

2014ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான பிஜேபி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து குஜராத் மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக உயர்ந்தார்.

குஜராத் மாநிலத்தில் குறுகிய காலகட்டத்தில் ஏற்பட்ட அதீத வளர்ச்சி இந்தியாவில் முழுவதும் உருவாகும் எனப் பலருக்கும் நம்பிக்கையை விதைத்து மோடி அரசு.

 மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

அதன்படியே நாட்டின் உற்பத்தித் துறையைப் பல மடங்கு உயர்த்தும் வகையில் கார் முதல் விமானம் வரை, குண்டூசி முதல் வெடிக்குண்டு வரையில் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியைத் துவங்க ஏதவான விதிமுறைகளை மையமாகக் கொண்டு மோடி அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது.

இத்திட்டம் பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் பெரிய ஈர்க்கவில்லை, இதனால் தோல்வி அடைந்தது.

 

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு

இதன் பின்பு நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை ஓரே இரவில் அழிக்க வேண்டும் என்பதற்காக நாட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

இதன் மூலம் மக்கள் அனுபவித்த பாதிப்புகளைச் சொல்ல நேரம் போதாதது. அனைத்தையும் தாண்டி பணமதிப்பிழப்புக் காலத்தில் வங்கிகள் பெற்ற பணத்தை இன்னமும் கணக்கிட்டு முடிக்காமல் உள்ளது ரிசர்வ் வங்கி.

 

 ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

நாட்டின் மறைமுக வரியை முழுமையாக நீக்கிவிட்டு உலக நாடுகளில் இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி போல இந்தியாவிலும் கொண்ட வர வேண்டும் எனக் காங்கிரஸ் தனது முந்தைய ஆட்சியில் கூறியபோது கடும் எதிர்ப்பை பிஜேபி தெரிவித்தது.

ஆனால் பல எதிர்ப்புகளைத் தாண்டி மோடி தலைமையிலான பிஜேபி அதே ஜிஎஸ்டி திட்டத்தைச் சில மாற்றங்கள் செய்து அறிமுகம் செய்தது.

 

 அதிகப்படியான வரி

அதிகப்படியான வரி

ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ஜிஎஸ்டி வரி வசூலில் அளவு இன்னமும் நிலைப்பெற வில்லைத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

வேலைவாய்ப்புப் பாதிப்பு

வேலைவாய்ப்புப் பாதிப்பு

ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் நாட்டின் வகைப்படுத்தாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியே பாதிப்படைந்தது.

 வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

இந்நிலையில் தான் தமிழ் குட்ரிட்டன்ஸ் 2019 பொதுத் தேர்தலில் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா என வாக்கெடுப்பு நடத்தியது.

இதில் சுமார் 5000க்கு அதிகமானோர் வாக்கு அளித்துள்ளது.

 

ஆதரவு

ஆதரவு

இதில் 23 சதவீதம் பேர் அதாவது 1,247 பேர் 2019 பொதுத் தேர்தலில் மோடி கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்பார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

இதற்கு நேர்மாறாக 77 சதவீதம் பேர் அதாவது 4,076 பேர் மோடி நிச்சயம் வெற்றிபெறமாட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

மிஸ்ரி இன்டெக்ஸ்

மிஸ்ரி இன்டெக்ஸ்

மோடியில் 2014ஆம் ஆண்டு வெற்றிக்கு இந்தியா முழுவதும் வீசிய மோடி அலை தான் காரணம் எனப் பலரும் கூறிய நிலையில் இந்தக் குறுகிய காலகட்டத்தில் மோடி அலை காணாமல் போய் உள்ளது என மிஸ்ரி இன்டெக்ஸ் விளக்கம் அளிக்கிறது.

 

வாக்குகளை  பதிவு செய்ய

வாக்குகளை பதிவு செய்ய

மோடியின் வெற்றி மீது உங்களுக்கு மாறுப்பட்ட கருத்து இருந்தாலோ, அல்லது மோடியை ஆதரவு செய்தாலோ உங்கள் வாக்குகளை இந்த இணைப்பில் பதிவு செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+