ஏர் இந்தியா விமானத்தில் ஏப்ரல் முதல் விமான டிக்கெட்டை முன்கூட்டியே புக் செய்யும் போது ஜன்னல் ஓரம் மற்றும் அஸ்லி இருக்கைக்கு ஏப்ரல் 1 முதல் கூடுதல் கட்டணம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் மூன்று இருக்கைகள் உள்ள வரிசையில் மத்தியில் உள்ள இருக்கையினைத் தேர்வு செய்யும் போது எந்தக் கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இந்தக் கட்டண முறையானது உள்நாடு மற்றும் வெளிநாடு என சேவைக்கும் பொருந்தும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
முதல் வரிசை சீட்
ஏர் இந்தியா நிறுவனம் ஏற்கனவே முதல் வரிசையில் காலை நன்றாக நீட்டி உட்கார்ந்து பயணம் செய்யக் கூடுதல் கட்டணத்தினை வசூலித்து வருகிறது.
புதிய சேவை
விமானம் புறப்பட 4 மணி நேரம் உள்ள வரையில் இந்த ஜன்னல் ஓர சீட் தேர்வு முறையானது இருக்கும். இந்தச் சேவையின் கீழ் சீட்டை தேர்வு செய்யும் போது அதற்குக் கூடுதல் கட்டணம் எவ்வளவு என்பது காண்பிக்கப்படும். அதனைப் பயணிகள் செலுத்த வேண்டும்.
கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்
உள்நாட்டு ரூபாய் மதிப்பில் தான் இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த டிக்கெட் புக்கிங் சேவையானது விமான நிலைய டிக்கெட் கவுண்ட்டர், அழைப்பு மையங்கள், இணையதளம் மற்றும் மொபைல் செயலி போன்றவற்றிலும் கிடைக்கும்.
ரத்து செய்தால் என்ன ஆகும்?
அதே நேரம் இந்தச் சீட்டுகளைத் தேர்வு செய்த பிறகு டிக்கெட்டினை முழுமையாக ரத்து செய்தால் ஜன்னல் ஓர சீட்டிற்காக வசூலிக்கப்பட்ட கட்டணமும் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்.
கூடுதல் கட்டணம் எவ்வளவு?
டெல்லியில் இருந்து சிங்கப்பூர் செல்ல முதல் வரிசை டிக்கெட்டிற்கு 1,500 ரூபாய் கூடுதல் கட்டணமாகும். இதை முன்பதிவு செய்யும் போது கூடுதலாக 450 ரூபாய் கட்டணம் ஆகும். இதுவே சென்னை - துபாய்ச் செல்லும் பொது 1,000 ரூபாய் + 300 கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சென்னை - கொலூம்பு செல்லும் போது 500 ரூபாய் + முன்பதிவு கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications